சிபிஐ எம்.பி., சந்தோஷ்
மதமாற்றம், மனிதக் கடத்தல் உள்ளிட்ட போலியான குற்றச்சாட்டுடன் கேரள கன்னியாஸ்திரிகள் ஒரு அறையில் அடைக்கப்பட்டு, மிரட்டப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் பஜ்ரங் தளத்தினர் மீது சத்தீஸ்கர் பாஜக அரசு எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. விரைவாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும்.
தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்எல்ஏ ஜிதேந்திர அவ்ஹாத்
சனாதன தர்மம்தான் சிவாஜி மன்னரின் முடிசூட்டு விழாவை மறுத்து, சம்பாஜி மன்னரை அவமதித்தது. சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள்தான் சாவித்ரிபாய் பூலே மீது பசு சாணத்தை வீசி, ஜோதிராவ் பூலேவை படுகொலை செய்ய முயன்றனர். இவர்களால்தான் அம்பேத்கரை தண்ணீர் குடிக்கவும், பள்ளியில் சேரவும் அனுமதிக்கவில்லை.
திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் கனிமொழி
தமிழ்நாட்டிலிருந்து கிடைத்துள்ள பழமையான கையெழுத்துப் பிரதிகளான ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கு ஒன்றிய அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதா? மேற்கொள்ள முன்மொழிந்திருக்கிறதா?
ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி
ஆம் ஆத்மியின் சத்யேந்தர் ஜெயின் அமைச்சராக இருந்த போது தகுதியற்ற நியமனங்கள் வழங்கப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. பாஜக கூறியதும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றவை என கூறியுள்ளது. இவ்வளவு தான் பாஜகவின் போலி அரசியல்.