தொடர் கனமழையால் இமாச்சல், உத்த ரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநி லங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் தொடர் கனமழையால் கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அலகாபாத் நகரில் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மக்கள் தங்களது வீடு களில் இருந்து கேன்கள் மூலம் தண்ணீரை வாரி இறைத்து வெளியேற்றினர்
இந்திய ராணுவம் பற்றி அவதூறாக பேசிய தாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் (லக்னோ நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு) விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித் துள்ளது
5 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டி னாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியர், பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை அன்று சந்திக்க உள்ளார்.