அமெரிக்க விசா கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த வர் ரோகிணி (38). இவர் தற் போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பத்மாராவ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தின ருடன் வசித்து வந்தார். ரோகிணி ரஷ்யாவில் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், அமெரிக்கா வில் வசிக்கவும், மேற்படிப்பை தொடர வும் “ஜே-1 விசாவுக்கு” விண்ணப்பித்து இருந்தார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய அமெரிக்காவிற்கு சென்ற ரோகிணி விசா கிடைக்கும் என்ற நம்பிக் கையில் பல மாதங்கள் காத்திருந்தார். ஆனால் அவரது விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் ஹைதராபாத் திரும்பிய ரோகிணி, ஞாயிறன்று தனது வீட்டின் அறையில் அதிகளவு தூக்க மாத்திரை களை சாப்பிட்டு மயங்கிக் கிடந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் ரோகிணியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். மருத்துவமனையில் ரோகிணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெ னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.