tamilnadu

img

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்றார்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்றார்!

புதுதில்லி, நவ. 24 - உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் திங்கட்கிழமை (நவ.24) அன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.  குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, சூர்ய காந்த்திற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர். கவாய் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதி யாக பதவியேற்றுள்ள சூர்ய காந்த், அடுத்த 15 மாதங்களுக்கு - 2027 பிப்ர வரி 9 வரை பதவியில் இருப்பார். நீதிபதி சூர்ய காந்த், பல்வேறு முக்கியமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். பழமையான தேசத் துரோகச் சட்டம் மறுஆய்வு செய்யப்படும் வரை,  அதன்கீழ் புதிய வழக்குகள் பதிவு செய்யப்படக் கூடாது; பீகாரில் வாக்கா ளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத் தின்போது நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளி யிட வேண்டும்; உச்சநீதிமன்ற வழக்க றிஞர் சங்கம் உள்பட அனைத்து வழக்க றிஞர் சங்கங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் போன்ற  வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை அளித்த அமர்வுகளில், இடம்பெற்றி ருந்தவர் நீதிபதி சூர்ய காந்த் ஆவார். பெகாசஸ் வேவு மென்பொருள் வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி சூர்ய காந்த், ‘தேச பாதுகாப்பு என்ற பெயரில் அரசுக்கு எப்போதும் சலுகை அளிக்க முடியாது’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.