tamilnadu

img

குழப்பம், விரக்தி, மன அழுத்தம்: சிறப்பு தீவிர திருத்தம் ஓர் அவசர அராஜகம்!

குழப்பம், விரக்தி, மன அழுத்தம்: சிறப்பு தீவிர திருத்தம்  ஓர் அவசர அராஜகம்!

மன்னார்குடி, நவ.24 - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்  பணிகள், பொதுமக்களின் குழப்பம், விரக்தி,  மன அழுத்தம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வடிவமாகவே அரங்கேறி வருகின்றன. “ஏதோ  கொடுத்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்”  என்று மக்கள் சலிப்புடன் கூறியதை எல்லா மையங்களிலும் காண முடிந்தது. கடந்த காலங் களில் இல்லாத இந்தக் கடும் கெடுபிடி, மக்களைச்  சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் சனி, ஞாயிறு (நவம்பர் 22-23) ஆகிய இரு தினங்கள் படி வங்கள் பெறும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மன்னார்குடி வருவாய் உட்கோட்டத்திலுள்ள மன்னார்குடி, கூத்தாநல்லூர், நீடாமங்கலம், கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய நகரங்களில்  நடந்த முகாம்களில் மக்களைச் சந்தித்தோம். பரவலாகப் பெய்த மழையால் எங்கும் சேறும்  சகதியுமாக இருந்தது. முகாம்கள் நடந்த பள்ளி களின் முன்பு குழப்பமாக நின்று கொண்டி ருந்த மக்களிடம் பேசினோம். ‘2002 விவரங்களை எங்கே தேடுவது?’ நீடாமங்கலத்தில் ஒரு பள்ளியில் சந்தித்த 60  வயது மதிக்கத்தக்க ஒருவர், 2002 ஆம் ஆண்டுக் கான வாக்காளர் பட்டியல் விவரங்களைக் கேட்கும் நடைமுறையால் தான் படும் சிரமத்தைப்  பகிர்ந்துகொண்டார். “அப்போது நான் தஞ்சா வூரில் வாடகை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். எங்கு ஓட்டுப் போட்டேன், என்ன பாகம் என்று நினைவில்லை. அப்போது  வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட வில்லை. இவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க ஒரு  மாதம் (டிசம்பர் 4 கடைசி நாள்) தான் அவகாசம்  என்பது அராஜகம்” என்று அவர் விரக்தியுடன் கூறினார். முதியோர்கள் தங்கள் சொந்த விவ ரங்களையே மறந்துபோன நிலையில், இத்த கைய தேடலைத் திணிப்பது அநீதி. கோட்டூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சந்தித்த முகமது அனஸ் அன்சாரி  என்ற இளைஞர், “சாதாரண ஏழை - எளிய பாமர  மக்கள் தடுமாறுகிறார்கள். 2002-இல் மன்னார்குடி  தொகுதியில் இருந்த பாலையூர் போன்ற பல  பகுதிகள் இப்போது திருத்துறைபூண்டி தொகு தியில் உள்ளன. இந்த விவரங்களை பெருமழை யில் ஒரு மாதத்திற்குள் தேடுவது பாமர மக்க ளுக்கு சாத்தியமில்லை. குறிப்பாக, எங்கள்  கிராமங்களில் சாகுபடி நாசமாகி கிடக்கிறது.  மூன்று அல்லது ஆறு மாத அவகாசம் கொடுக் காமல் கெடு விதிப்பது, தமிழகத்தில் பாஜக- வுக்கு ஓட்டு கிடைக்காது என்பதால் வாக்கா ளர் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வேலைதான்” என்று குற்றம் சாட்டினார். ‘ஓய்வூதியதாரர் பிஎல்ஓ-வாக அவதி’ முத்துப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் நின்றிருந்த மணிகண்டன், “2002-இல் எங்கள் குடும்பம் ஒரத்தநாட்டில் இருந்தது. அப்பா ஓய்வு பெற்ற பிறகு முத்துப்பேட்டைக்கு வந்து விட்டோம். கடந்த தேர்தலிலும் வாக்களித்து விட்டோம். இந்த நிலையில், 2002 பட்டியல் விவ ரங்களைக் கேட்டால் இது சர்வாதிகாரம்தான். இதைவிட மோசமான விஷயம்: 35 ஆண்டுகள்  அங்கன்வாடியில் பணிபுரிந்து, ரூ. 2000 ஓய்வூ தியம் பெறும் 65 வயது மூதாட்டி ஒருவர் எங்கள்  பகுதிக்கு பிஎல்ஓ-வாக உள்ளார். ‘இந்த வய தில் எப்படி அவசர கதியில் அலைவது’ என்று  அவர் அழுதுவிட்டார்” என்றார். மன்னார்குடி எஸ்பிஏ பள்ளியில் பேசிய,  ஐடி துறையில் பணிபுரியும் ஒரு வாலிபர், “அப்பா இல்லாத நிலையில், அம்மாவிற்காகப் படிவத்தைப் பூர்த்தி செய்வது எனக்கே நெரு டலாக உள்ளது. படிவங்களைப் பார்த்த என்  சகோதரிகள் குழம்புவதைக் கேட்டால் சிரிப்பதா  அழுவதா என்று தெரியவில்லை. நியாயமான  அவகாசம் கொடுக்காமல் நிர்ப்பந்திப்பது தேர்தல் ஆணையத்தின் அப்பட்டமான ஜனநா யக மீறல். இப்படி ஒரு தேர்தல் நடைமுறை நடக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்க முடியும்” என்று ஆதங்கப்பட்டார். ஜனநாயகப் படுகொலை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட, பரி தவிப்பில் உள்ள இப்பகுதிகளில், சிறப்பு  தீவிர திருத்தம் அவசரமாகத் திணிக்கப்படுவது மனித உரிமை மீறல் மற்றும் ஜனநாயகப் படு கொலை என்பது தெளிவாகத் தெரிந்தது. இது  மோடி அரசின் மீது கோபத்தையும் வெறுப்பை யும் உருவாக்கியிருக்கிறது. நாம் பார்த்த மையங் களில் பிஎல்ஓ-வாக இருந்த அத்தனை பேருமே  கடுமையான மன அழுத்தத்துடன் உழைக் கிறார்கள்; அவர்களுக்கும் இந்தக் குழப்பத்தின்  மீது கோபம் இருக்கிறது. இந்த அவசர நடவடிக் கையால் உண்மையான வாக்காளர்கள் பலர்  தங்கள் உரிமையை இழக்கும் அபாயம் எழுந் துள்ளது.