2026 முதல் படிப்படியாக பாடத்திட்டங்கள் மாறும்!
சென்னை, நவ. 24 - புதிய பாடத்திட்ட வடிவமைப்பு தொடர்பாக உயர்மட்ட வல்லுநர் குழு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் திங்களன்று (நவ.24) கூடியது. இஸ்ரோ தலைவர் நாராயணன், நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், விஞ்ஞானி த.வி. வெங்க டேஸ்வரன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். மாநில கல்விக் கொள்கையின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,” 2026-27 கல்வியாண்டு முதல் படிப்படியாக பாடத்திட்டங்கள் மாற்றப்படும்” என்றார். மேலும் அவர், “மாண வர்கள் புரிதலுடன் படிப்பதற்கு தேவை யான பாடத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது; ஆசிரியர் களுக்கு எப்படி பயிற்சி கொடுக்க போகிறோம் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப் பட்டது” என்றார்.
