states

தேர்தல் ஆணையத்தின் ‘தேசத்துரோகச்’ செயல்களை விரைவில் அம்பலப்படுத்துவோம்  சிவசேனா (உத்தவ்) எச்சரிக்கை

தேர்தல் ஆணையத்தின் ‘தேசத்துரோகச்’ செயல்களை விரைவில் அம்பலப்படுத்துவோம்  சிவசேனா (உத்தவ்) எச்சரிக்கை

தேர்தல் ஆணையத்தின் தேசத்துரோ கச் செயல்களை விரைவில் அம்பலப்படுத்துவோம் என “இந்தியா”  கூட்டணியில் அங்கம் வகிக்  கும் சிவசேனா (உத்தவ்) கட்சி எச்சரிக்கை  விடுத்துள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாந கராட்சி தேர்தலுக்கான வரைவு வாக்கா ளர் பட்டியல் வெளியிடும் தேதி தொடர் பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆதித்ய தாக்கரே தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில்,”சிவசேனா (உத்தவ்) கட்சியின் நிர்வாகி ஒருவர் மாநகராட்சியின் மத்திய தேர்தல் பிரிவில்  முறையாகக் கட்டணம் செலுத்திப் பெற்ற  மும்பை வரைவு வாக்காளர் பட்டியலில், வெளியீட்டுத் தேதி நவம்பர் 14, 2025  என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதலில் நவம்பர் 7 அன்று வெளியிடுவதாக இருந்த  பட்டியல், பிறகு நவம்பர் 14 என்றும், இறு தியில் நவம்பர் 20 அன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. அப்படி என்றால்  நவம்பர் 14ஆம் தேதியே தயாராக இருந்த  வரைவுப் பட்டியல் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது? மற்றவர்களுக்கு இந்தப் பட்டியலைக் கொடுப்பதில் ஏன் இவ்வளவு கால தாமதம் ஏற்பட்டது? வாக்  காளர் பட்டியலில் ஏதாவது குறுக்கீடு செய்ய இழுத்தடிக்கப்பட்டதா? யாரு டைய உத்தரவுக்காகக் காத்துக் கொண்டி ருந்தது தேர்தல் ஆணையம்? இந்த வாக்காளர் பட்டியல் ஏன் அச்சு இயந்தி ரத்தால் படிக்கக்கூடிய வடிவத்தில் இல்லை? தேர்தல் ஆணையத்தின் தேசத்  துரோகம் அம்பலமாகிவிடும் என்பத னாலா? தேர்தல் ஆணையத்தின் செயல் கள் குறித்து விரைவில் ஒரு பெரிய ரகசி யத்தை அமல்படுத்துவோம்” என அவர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.