பார்வையற்றோர் இந்திய மகளிர் கேப்டன் தீபிகா
நான் மிகவும் ஏழைக் குடும்பத்திலிருந்து வருகிறேன். சில நாட்களில் சரியான உணவைக் கூட வாங்க போராடியிருக்கி றோம். உலகக் கோப்பையை வெல்வது எங்களுக்கு மிகவும் பெருமையாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்கிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ்
நவம்பர் 30ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் தலித் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். விண்ணப்பம் ஜூலை மாதத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இப்போது தில்லி காவல்துறை உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் காட்டி பேரணிக்கு அனுமதி மறுக்கிறார்கள். நாடு முழுவதும் தலித் பேரணிகளை பாஜக திட்டமிட்டு தடுத்து வருகிறது.
தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சி
நாட்டின் ஆட்சி முறை ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்து, எதேச்சதிகார ஆட்சியை நோக்கி நகர்த்துவதாக இருக்கிறது. மக்களின் ஆட்சி நமக்கு தேவையா?, அல்லது ஒரு சிலரின் கைகளில் மையப்படுத்தப்பட்ட எதேச்சதிகார ஆட்சியா? என்பதில் நாட்டு மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களே! மேற்கு வங்க மாநிலத்தின் 52 வயது பெண் பிஎல்ஓ ரிங்கு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறிப்பில், தனது மரணத்திற்கு தேர்தல் ஆணையம் மட்டுமே பொறுப்பு என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது தற்கொலைக்கு ஞானேஷ் குமார் தான் பொறுப்பேற்க வேண்டும்.
