பாஜக அரசு வேலைகளைத் திருடுகிறது ரயில்வேயில் 2,00,000 பணியிடம் குறைப்பு
திருவனந்தபுரம் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு 11 ஆண்டுகளில் ரயில்வே யில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களைக் குறைத்துள்ளது. டிராக் மேன்களை உள்ளடக்கிய “குரூப் டி” முதல் உயர் அதிகாரிகள் அடங்கிய “குரூப் ஏ” வரையிலான பிரிவில் இந்த பணியிட குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 2014இல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த போது, ரயில்வேயில் 13.31 லட்சம் நிரந்தர ஊழியர்கள் இருந்தனர். காலியிடங்களின் எண்ணிக்கை 2,25,863 ஆக இருந்தது. ஆனால் 2025இல், நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை 12.50 லட்சமாகவும், காலி யிடங்களின் எண்ணிக்கை 2,76,000 ஆகவும் குறைந்துள்ளது. நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு ஆண்டும் 2% குறைக்க வேண்டும் என்ற நிதி ஆயோக் கின் பரிந்துரையின்படி பதவிகள் ஒப்ப டைக்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பதவியில் காலியிடம் இருந்தால், அதில் 50% ஒப்படைக்கப்படுகிறது. இரண்டாவது பாஜக அரசின் கடைசி காலத்தில், 3.75 லட்சம் காலியிடங்கள் இருந்தன. ஆனால் ‘அனு மதிக்கப்பட்ட பதவிகள்’ என்ற அளவு கோலைப் பயன்படுத்தி காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஊழியர்களைக் குறைக்க டிஜிட்டல் கட்டண முறை பணியாளர்களைக் குறைப்பதன் ஒரு பகுதியாக, ரயில்வே டிஜிட்டல் கட்டணத்தை விரிவுபடுத்துகிறது. பெரிய நிலையங்களில் 14 பொது டிக்கெட் கவுண்டர்கள் வரை இருந்தன. முன்பதிவுக்கான எட்டு டிக்கெட் கவுண்டர்கள் தற்போது இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளன. டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் நிறுவப்படுகின்றன. அவற்றை இயக்க ஒப்பந்தங்கள் வழங் கப்படுகின்றன. இதற்காக ஓய்வு பெற்ற ஊழியர்கள் மீண்டும் நியமிக்கப்படு கிறார்கள். அறுபது வயதில் ஓய்வு பெறு பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப் பட்டு, மீதமுள்ள தொகை அவர்களின் சேவை யின் முடிவில் சம்பளமாக வழங்கப்படுகிறது. ஓய்வூதியத் தொகை இதிலிருந்து குறைக் கப்படும்.
