states

img

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்பு

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்பு

மோதல் நிறுத்தம்

போர் நிறுத்த அறிவிப்பை கேரள முதலமைச்சர் பின ராயி விஜயன் வரவேற்றார்.  எல்லையில் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட  முடிவு எடுத்தது புத்திசாலித்தனமான செயல் என்று அவர் கூறினார். மக்களும்  நாடும் அமைதியை விரும்புகின்றன. பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தொடர்வதும், அமைதி மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக நிற்பதும் முக்கியம் என முதலமைச்சர் கூறினார்.

திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் தொடரும்

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த  ஒப்பந்தத்தின் பின்னணியில், மாநில அர சின் நான்காம் ஆண்டு விழாவை முன்னர் திட்டமிட்டபடி நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எல்லையில் ஏற்  பட்ட மோதலின் பின்னணியில் இந்நிகழ்வு கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டி ருந்தது. மாவட்ட மற்றும் மாநில அளவி லான கூட்டங்கள், “என்னுடைய கேரளம்”  கண்காட்சி மற்றும் பிராந்திய மறுஆய்வுக்  கூட்டங்கள் மே 13 செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறும். ஒத்திவைக்கப்பட்ட மலப்புரம் மாவட்டக் கூட்டம் உட்பட 13ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த பிற கூட்டங்களின் தேதிகள் பின்னர் அறி விக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.