நாடு முழுவதும் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை
சென்னை, தில்லி உட்பட 250 நகரங்களில் நடைபெறுகிறது
ஜம்மு-காஷ்மீரின் பஹல் காம் அருகே பைசரன் பகு தியில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி னர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப் பான லஷ்கர்-இ-தொய்பாவின் துணை பிரிவான “தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்” பொறுப்பேற்றுள்ளது. ஆனாலும் பாகிஸ்தான் ராணு வம், அந்நாட்டின் உளவு அமைப்பு கள் ஆதரவுடன் தான் தி ரெசிஸ் டன்ஸ் ப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது என இந்தியா குற்றம்சாட்டி, பாகிஸ் தான் மீது பல்வேறு தடைகளை (குடி மக்கள் வெளியேற்றம், சிந்து நதி ஒப்பந்தம், பொருளாதார தடை) விதித் தது. பாகிஸ்தானும் பதிலுக்கு பல் வேறு தடைகளை விதித்தது. தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் ராணுவ பயிற்சி உட்பட போர் ஒத்திகைகளில் தொட ர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன. இத னால் இரு நாடுகளின் எல்லை யோரப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஒன்றிய அர சின் பல்வேறு கட்ட ஆலோச னைக்குப் பிறகு எந்தவொரு தாக்கு தலுக்கும் தயாராக இருக்க புதன் கிழமை அன்று (மே 7) பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறும், பாகிஸ்தானையொட்டிய எல்லை யோர இந்திய மாநிலங்கள், முக் கிய நகரங்கள், அணுமின் நிலை யங்கள், விமான நிலையங்கள் உள்ள நகரங்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த வேண்டும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அன்று உத்தர விட்டது.
இன்று என்ன நடக்கும்?
போர்க் காலங்களின் போது இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம். அதே போன்று புதன்கிழமை நடைபெற உள்ள ஒத்திகையின் போது வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே மக்களை எச்ச ரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிக்கச் செய்வார்கள். ஒத்திகை நடைபெறும் இடங்களில் சைரன் ஒலி களுடன் போர் விமானங்கள் வானில் வட்டமிடும். இரவு நேரத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தும் போது, அப்பகுதி களில் மின்சாரம், இணையதளம் ஆகியவற்றை முழுமையாக முடக்கி மக்கள் வெளியேற்றப்படுவார்கள்.தாக்குதலுக்குள்ளானால் மக்க ளைப் பாதுகாப்பாக வெளியேற்றத் திட்டம் 1,2,3 ஆகியவற்றை தயாரித்து பாதுகாப்புப் படையினர் செயல்படுத்துவார்கள். குறிப்பாக மருத்துவ மனைகளின் தயார்நிலை சரிபார்க்கப்படும். அனைத்து விமானப் படை தளங்களிலும் நெடுஞ்சாலைகளில் உள்ள போர் விமான தளங்களி லும் விமானங்களை தரையிறக்கி சோதனை செய்வார்கள். எல்லையோரப் பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேற்றப் படும் மக்களைப் பதுங்கு குழிக்கு அழைத்துச் சென்று ஒத்திகை செய்யப்படும். இந்திய விமானப்படையுடன் ஹாட்லைன் அல்லது ரேடியோ தொடர்பு இணைப்புகளை செயல்படுத்தி கட்டுப்பாட்டு அறை களில் இருந்து சோதனை செய்யப்படும். தாக்குதல் நடைபெற்றால் தங்க ளைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள், மாணவர்கள் உள்ளிட்டோ ருக்கு பயிற்சி அளிப்பார்கள். அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட முக் கிய பகுதிகளில் வசிப்போர் போர்க்காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சிறப்புப் பயிற்சி அளிப்பார்கள்.
தமிழ்நாட்டில் 4 இடங்களில் போர் ஒத்திகை
தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாட தொழிற் சாலை, மணலி பெட்ரோலிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட 4 இடங்களில் போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போர் பாதுகாப்பு ஒத்தி கைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செய லாளர் நா.முருகானந்தம் தலை மையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
54 ஆண்டுகளுக்குப் பிறகு...
1971ஆம் ஆண்டில் இந் தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அப்போது நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகைகள் நடத்தப்பட்டன. அதன்பின் 54 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை அன்று இந்தியா வில் போர் ஒத்திகை நடைபெறு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.