சோதனைச்சாவடியில் நிழற்கூரை இல்லை சுற்றுலாப் பயணிகள், பணியாளர்கள் அவதி
மே.பாளையம், மே 6- கல்லூறு பகுதியில் இயங்கி வரும் இ-பாஸ் சோதனைச்சாவடியில் ஏற்க னவே இருந்த நிழற்கூரை அகற்றப்பட்ட நிலையில், புதிதாக நிழற்கூரை அமைக் காததால், சோதனைச் சாவடி பணியாளர்களும், சுற்று லாப் பயணிகளும் கொளுத் தும் வெயிலில் அவதிய டைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்ட எல்லை பகுதியான கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் கல்லாறு தூரிப்பாலம் அருகே உயர் நீதிமன்ற உத்திரவின்படி அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு வருவாய்த்துறையினர், காவல் துறை யினர் இ-பாஸ் சோதனை செய்து வரு கின்றனர். இந்த இ-பாஸ் சோதனைச் சாவடியில் ஏற்கனவே இருந்த மூன்று நிழற் கூரையில் இரண்டு பந்தல் கூரைகள் சேதம டைந்து அவை கீழே விழும் நிலையில் அகற்றப்பட்டது. இவை அகற்றப்பட்டு மூன்று வாரத்திற்கும் மேலாகியும் புதிதாக நிழற் கூரை அமைக்காத காரணத்தால் சோத னைக்காக நிறுத்தப்படும் சுற்றுலாப் பயணி களும், சாவடி பணியாளர்களும், காவலர் களும் கொளுத்தும் கோடை வெயிலில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக பணியாளர்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இ-பாஸ் சோதனை சாவடியில் உடனடியாக நிழற்கூரை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.