tamilnadu

சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த பெண் கைது

சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த பெண் கைது

கோவை, மே 6- கோவையில் 5 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த பெண்ணை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.  கோவை மாவட்டம், புலியகுளம் அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியி ருப்பு வீடுகள் உள்ளது. இங்கே ஏராள மான குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இதில் அங்குள்ள எல் பிளாக்கில் பொன்வேல் (33) என்பவர் குடும்பத்து டன் வசித்து வருகிறார். ஹோட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் இவருக்கு 5 வயது குழந்தை உள்ளது. மகள், அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் இவர்கள் வசிக்கும் வீடு அருகில் கண்ணன் என்பவரது மனைவி சௌமியா (50) என்பவர் குடும் பத்துடன் வசித்து வருகிறார். சௌமியா வீட்டில் 4 நாய்களை வளர்த்து வருகிற நிலையில், இவர் வளர்த்த நாய்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு சிலரை கடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாய்களை வீட்டில் வளர்க்க வேண்டாம் என்று அக்கம் பக்கத்தினர் கூறியுள்ள னர். ஆனாலும் அவர் கேட்கவில்லை. பொன்வேலின் மகள் வீட்டு அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப் போது சௌமியா அவரை வேறு இடத் திற்கு சென்று விளையாடும் படி கூறி யுள்ளார். தொடர்ந்து அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது சௌமியா வீட்டில் வளர்த்த நாயை விட்டு அவரை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி யின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டி னர். இது குறித்து குழந்தையின் தந்தை  பொன்வேல் கேட்டதற்கு, தகராறு செய்து, சௌமியா திட்டியுள்ளார்.  இதைத்தொடர்ந்து பொன்வேல் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சம் பவம் குறித்து புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சௌமியா மற்றும் மகன்கள் மீது  வழக்குப்பதிவு செய்தனர். சௌமி யாவை கைது செய்து சிறையில் அடைத் தனர். மேலும் இந்த சம்பவத்தில் குழந் தையை கடித்த நாய் குறித்து ப்ளூ  கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அவர்கள் சிறுமியை  கடித்த நாய் மேலும் சிலரை கடித்து உள்ளது என்பதால் அந்த நாயை அங்கிருந்து கொண்டு சென்று தனியாக பராமரித்து அதை கண்காணித்து வருகிறார்கள். இச்சம்பவம் அம்மன் குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.