tamilnadu

நீட் தேர்வு கெடுபிடியை கண்டித்த மாணவர் சங்கத்தினர் மீது வழக்கு

நீட் தேர்வு கெடுபிடியை கண்டித்த மாணவர் சங்கத்தினர் மீது வழக்கு

திருப்பூர் மே 6- திருமுருகன்பூண்டி நீட் மையத் தில் மாணவ, மாணவிகளை சோதனை என்ற பெயரில் மன  உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட் டதை கண்டித்து போராட்டத்தில் ஈடு பட்ட இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டம், திருமுரு கன்பூண்டி நீட் மையத்தில் ஞாயி றன்று தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் கை மற்றும் கழுத்து களில் கட்டப்பட்டிருந்த கயிறு களை அறுத்தபின்பே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும், அதிக வார் உள்ள செருப்புகள் அனுமதிக்கப்படாத்தால் வெளியே விட்டு வெறும் காலிலேயே தேர்வு  மையத்திற்கு சென்றனர். தேர்வு 2  மணிக்கு தொடங்கப்பட்டாலும், மாணவ, மாணவிகளின் ஆவணங் கள் சோதனை செய்ய வேண்டும் என 11 மணி முதல் மதிய உணவு கூட உட்கொள்ளாமல் காத்திருந்த னர். மேலும் ஒரு மாணவி அதிக பட்டன்கள் உள்ள உடை அணிந்து  வந்ததால், தேர்வுக்கு அனுமதிக்கப் படாமல் அவதிக்குள்ளாது உள் ளிட்ட பல்வேறு வகையில் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாக்கப் பட்டனர். இதையடுத்து தேசிய தேர்வு முகமையை கண்டித்து இந் திய மாணவர் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ் நாடு சட்ட மன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது என்பது குறிபிடத்தக்கது. இந் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, மாவட்டத் தலைவர் கல்கிராஜ், மாவட்டச் செயலாளர் பிரவீன்குமார் உள்ளிட்ட 14 பேர் மீது 15.வேலம்பாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இதுகுறித்து அரசியல் செயற் பாட்டாளர்கள் கூறுகையில், நீட்  தேர்வு கூடாது என்பது தமிழக அர சின் நிலைப்பாடு, மேலும், இது தான், பாஜக தவிர தமிழகத்தில் மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு. இந்நிலையில், நீட் தேர்வை நடத் தும் ஒன்றிய அரசின் தேர்வு முகமை கெடுபிடி காட்டினால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், தமிழக காவல் துறையினர் ஏன் ஒன்றிய அரசிற்கு இவ்வளவு விசுவாசத்தை காட்டு கின்றனர் என்பதுதான் புரிய வில்லை. நீட் தேர்வு எழுத வந்த  மாணவர்களை மனவுளைச்ச லுக்குள்ளாக்கிய சம்பவத்தை கண்டித்து, நியாயம் கேட்ட இந் திய மாணவர் சங்கத்தினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்வ தெல்லாம் அநீதியானது, என்றனர்.