மதுரை ஆதீனத்தை கைது செய்யக்கோரி புகார்
கோவை, மே 6- சகேதரத்துவத்துடன் வாழும் தமி ழக மக்களிடையே பிரிவினை உண் டாக்கும் வகையில், பேசிய மதுரை ஆதீனத்தை கைது செய்ய வேண்டும் என அனைத்து இயக்கங்களின் நிர் வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் செவ்வாயன்று புகார ளித்தனர். கோவை மாநகர காவல் ஆணை யர் சரவண சுந்தரிடம் செவ்வாயன்று கோவை அனைத்து இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில், தந்தை பெரியார் திராவிட கழக மாநில பொதுச் செயலாளர் கு.ராம கிருட்டிணன் தலைமையில் நிர்வாகி கள் மனு அளித்தனர். அதில், கடந்த 2 ஆம் தேதியன்று மதுரை ஆதீனம் சென்ற வாகனம் உளுந்தூர்பேட்டை சாலை அருகே விபத்தில் சிக்கியது தொடர்பாக, 2 நாட்கள் கழித்து பிறகு அவர் தனது கார் ஒட்டுநர் மீது இருந்த தவறை மறைத்து அந்த விபத்து தீவிர வாத தாக்குதல் என்று கூறியிருந் தார். தங்கள் கார் மீது மோதிய வாகன ஓட்டிகள் ஒரு குறிப்பிட்ட மத அடை யாளத்துடன் இருந்ததாக தெரிவித்து இருந்தார். ஆனால் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இவர்கள் சென்ற வாக னம் தான் சாலையில் சென்ற வாகனம் மீது உரசியது தெரியவந்தது. ஆனால் நடைபெறாத ஒன்றை நடைபெற்ற தாக கூறி இரு வேறு மதங்களுக்கு இடையே கலவரம் உண்டாக்கக் கூடிய நோக்கத்துடன் அவர் பேசி யிருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது. அனைத்து மக்களும் பேத மின்றி சகோதரத்துவத்துடன் வாழும் தமிழ்நாட்டில் மத கலவரத்தை உண் டாக்க வேண்டும் என்கின்ற நோக்கத் தோடு இரு வேறு பிரிவினருக்கு இடையே வன்மத்தை தூண்டக் கூடிய வகையில் பேசிய மதுரை ஆதீனத் தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனு வில் கூறியிருந்தனர். இதில் தமிழ்நாடு திராவிடர் சுய மரியாதை கழக தலைவர் நேருதாஸ், வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு இயக்கம் காமராஜ், சிபிஐ (எம்எல்) லிபரேசன், நாராயணன், இந்திய ஒற்றுமை இயக்கம் கதிரவன், திரா விட தமிழர் கட்சி வெண்மணி, விடு தலை சிறுத்தை கட்சி குரு மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி, தமி ழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் அதி காரம் உள்ளிட்ட அமைப்புகள் நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.