states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திரிணாமுல் எம்.பி., சாகேத் கோகலே

மோடி தனது அலுவலகத்துக்கு செல்வதைக் கூட தலைப்புச் செய்திகளாக போடுகிறார்கள். இது என்ன தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்தியா? ஊடகங்கள் இப்படி இருப்பதால்தான் 11 வருடங்களாக ஊடக சந்திப்பை நடத்தாமல் மோடி பிழைக்க முடிகிறது. 

காங்கிரஸ் எம்.பி., வர்ஷா கெய்க்வாட்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், குடும்ப உறுப்பினர்களை இழந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏன் நாடே எதிர்பார்க்கிறது. ஆனால் நடப்பதோ வேறு.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

உத்தரப்பிரதேசத்தில் நடப்பது எதுவும் சரியாக இல்லை. ஜெயப்பிரகாஷ் நாராயண் மையத்திற்கு எதிராக பல்வேறு சதி உள்ளது. மாநில பாஜக அரசு ஜெயப்பிரகாஷ் நாராயண் மையத்தை விற்க தயாராக இருந்தால், அதை சமாஜ்வாதிகள் வாங்க தயாராக இருக்கிறோம்.

ஆம் ஆத்மி மாநிலங்களவை தலைவர் சஞ்சய் சிங்

தில்லிக்கு தண்ணீர் ஆதாரமே ஹரியானா தான். இப்போது இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியே உள்ளது, ஒன்றிய அரசும் கூட அவர்கள்தான். நாங்கள் கோரிக்கை வைத்தபோது ஹரியானா அரசு தண்ணீர் கொடுக்கவில்லை. இப்போது ஹரியானாவில் பாஜக அரசே உள்ளது. தண்ணீர் தேவை தொடர்பாக தில்லி  பாஜக அரசு குரல் கொடுக்க வேண்டும்.