states

img

மூத்த பத்திரிகையாளர் துளசி பாஸ்கரன் காலமானார்

திருவனந்தபுரம், ஜன. 27 - மூத்த பத்திரிகையாளரும், தேசாபிமானியின் முதல் பெண் செய்தி ஆசிரியருமான துளசி பாஸ்கரன் (77) காலமானார்.  அவரது சொந்த ஊர் நெடு மங்காடு. திருவனந்தபுரம் மஞ்சாலிக்குளம் தர்மாலயம் ரோடு அக்ஷயா என்ற இடத்தில் வசித்து வந்தார். 1984-இல் தேசாபிமானி கொச்சி யூனிட்டில் துணை ஆசிரியர் பயிற்சியாள ராக ஊடகத்துறையில் பணியைத் தொடங்கிய துளசி பாஸ்கரன், 1989 முதல் திருவனந்தபுரத்தில் ‘ஸ்த்ரீ’ என்ற சிறப்பு பதிப்பின் பொறுப்பாளராகவும், பின்னர் திருவனந்தபுரம் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். 2008-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற்றார். ‘இ.கே. நாயனாரின் தலைமறைவுக் கால நினைவுகள்’, ‘நேசித்து தீராமல்’ ஆகிய புத்தகங்களையும், ஏழு மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) முதல் அகில இந்திய தலைவரும், சிந்தா பப்ளிஷ ர்ஸின் முன்னாள் ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒரு வருமான மறைந்த சி. பாஸ்கர னை மணந்த துளசி பாஸ்கரனுக்கு- மேஜர் தினேஷ் பாஸ்கர் (முதலமைச்சர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர்), மறைந்த மனேஷ் பாஸ்கரன் ஆகிய இரண்டு மகன்கள். மருமகள்கள் ஸ்ரீலேகா தினேஷ், பொன்னி மனேஷ்.  தோழர் துளசி பாஸ்கரனின் உடல்,  திங்கள்கிழமை பகலில் மஞ்சாலிக் குளத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட நிலையில்,  செவ்வாய்க் கிழமை காலை தைக்காடு சாந்திகவாடத்தில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.