states

img

உஷா நிறுவனத்தின் சோலார் தகடுகளை ஸ்டிக்கர் ஒட்டி விற்கும்

உஷா நிறுவனத்தின் சோலார் தகடுகளை ஸ்டிக்கர் ஒட்டி விற்கும்

அதானி பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், உலக பணக்காரர்க ளில் ஒருவருமான கவுதம் அதானி குஜராத்தின் முந்த்ராவில் மிகப்பெரிய சோலார் (சூரிய ஒளி மின்சாரம்) உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வருகிறார். தற்போதைய சூழலில் நாட்டில் 50% அதிகமான அளவிலான சோலார் தகடு விற்பனை அதானியிடம் தான் உள்ளது. இந்நிலையில், குஜராத்தின் முந்த்ரா வில் 800 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெ ரும் தொழிற்சாலையை நடத்தினாலும், உஷா நிறுவனத்தின் சோலார் தகடு களை ஸ்டிக்கர் ஒட்டி அதானி விற்று வருவது அம்பலமாகியுள்ளது.  இதுதொடர்பாக பத்திரிகையாளர் பிரியா சிங் தனது டுவிட்டர் எக்ஸ் பக் கத்தில் வீடியோ அடங்கிய பதிவில், “நாட்டில் தற்போது ஒரு விசித்திரமான மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சோலார் தகட்டில் அதானி குழுமத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஸ்டிக்கரை நீக்கிப் பார்த்தபோது, அதன் அடியில் உஷா (பிரபல தையல் மிசின், மின்விசிறி நிறுவனம்) லோகோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது நுகர்வோரை ஏமாற்றும் செயலாகும்” என அவர் குற்றம்சாட்டியுள்ளார். மோடி ஆதரவுடன் உலகின் பெரும் பணக்காரராக அதானி இருந்தாலும் வேறு நிறுவனப் பொருட்களை  விற்கும் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் கண்டனத்துடன் விவாதத்தை ஏற்படுத்தி யுள்ளது.