states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பிப்.1-இல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்!

புதுதில்லி, ஜன. 17 - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என  எதிர்பார்க்கப்படும் நிலையில், இதில், முதல் கட்ட கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும் என்றும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1 அன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 31 அன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவதன் மூலம் கூட்டத் தொடர் தொடங்கும். அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் ரவிக்கு எதிரான கூடுதல் மனு விசாரணைக்கு ஏற்பு!

புதுதில்லி, ஜன. 17 - தமிழ்நாடு சட்டமன்றத் தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி காலம் தாழ்த்துவதாக ஏற் கெனவே குற்றம் சாட்டப் பட்டது. இதுதொடர்பாக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ரிட்  மனுக்  கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி குறுக்கீடு தொடர்பாக புதிய கூடுதல் மனுவையும், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.  தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, பி. வில்சன் ஆகி யோர் தாக்கல் செய்த இந்த மனுக்களை   நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மகா தேவன் அடங்கிய உச்சநீதி மன்ற அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு  சுற்றுச்சூழல் அனுமதி

சென்னை,ஜன.17- சென்னை ஈசிஆர் சாலை யில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது. வளர்ந்து வரும் தேவை, எதிர் காலத் தேவைகளை கருத்தில் கொண்டு சுமார் 25 ஏக்கர் பரப்ப ளவில் உலகத் தரத்தில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப் படும் என கடந்தாண்டு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வித்திருந்தார். இந்நிலையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க கடலோர மண்டல  ஒழுங்குமுறை ஆணைய அனு மதி கோரி பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது. 

ஈரோடு கிழக்கில் போட்டி இல்லை; த.வெ.க.

சென்னை,ஜன.17- த.வெ.க பொதுச் செய லாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் புறக்க ணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பொங்கல் தொகுப்பு விநியோகம் இன்று முடிகிறது

சென்னை,ஜன.17- நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு சனிக்கிழமை (ஜன.18)  வரை வழங்க பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தலா ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை 2.21 கோடி அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி வழங்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் விதமாக, ஜனவரி 18 வரை பொங்கல் தொகுப்பை வழங்க நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அதி காரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில்  இன்று கனமழைக்கு வாய்ப்பு  

சென்னை,ஜன.17-  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் ஜனவரி 18 அன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜனவரி 18 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை செவிலியர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

சென்னை, ஜன. 17 - புதுக்கோட்டையில் செவிலியர் மீது நடைபெற்றுள்ள தாக்குதலுக்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் நே.சுபின் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி 16 அன்று நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். குடிபோதையில் இருந்த நோயாளியின் உறவினர்கள் செவிலியரை தாக்கியுள்ளது கண்டனத்துக்குரியது. செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ  ஊழியர்கள் அரசு மருத்துவமனைகளில் தாக்கப்பட்டு வருவது தொடர்கிறது. இந்த சம்பவத்தில் அரசும், காவல்துறையும் குற்றவாளி மீது சமரசமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தினை கடுமையாக அமல்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஜன.21,22 சிவகங்கையில்  முதலமைச்சர் கள ஆய்வு

சென்னை,ஜன.17- அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். மேலும் அந்தந்த மாவட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்தும் பேசி வருகிறார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகிற 21 மற்றும்  22 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு செய்கிறார். ஜனவரி 21 அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். 22 ஆம் தேதி சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு ஏற்கனவே முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நான்குநேரி அருகே  500 ஆண்டுகளுக்கு முந்தைய 4 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

திருநெல்வேலி, ஜன.17 - நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே செண்பகராமநல்லூரில் 500  ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கள் கண்டறியப்பட்டன. நெல்லை வரலாற்று பண்பாட்டு கள  ஆய்வு மைய இயக்குநர் மாரியப்பன் இசக்கி மற்றும் நிர்வாகிகளுக்கு, நான்குநேரி அருகேயுள்ள செண்பக ராமநல்லூரில் பழங்கால கல்வெட்டு கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.  இதுகுறித்து செண்பகராமன் நல்லூர் ராமலிங்கசுவாமி கோயிலில் கல்வெட்டு ஆய்வு நடத்தினர். இந்த  கோயிலில் இருந்த 500 ஆண்டு களுக்கு முற்பட்ட திருவிதாங்கூர் கல்வெட்டுகள் உட்பட மொத்தம் 4 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.  இதுகுறித்து நெல்லை வரலாற்று பண்பாட்டு கள ஆய்வுமைய இயக்கு நர் மாரியப்பன் இசக்கி கூறுகையில், “கோயிலில் வேண்டாட்டு (திரு விதாங்கூர்) அரசரை வென்று மண்கொண்ட பூதல வீர உதய மார்த்தாண்டன் (1516-1535) 11 ஆவது ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டு கொல்லம் ஆண்டு 703 புரட்டாசி மாதம் 11 ஆம் தேதி வெட்டு விக்கப்பட்டது. இதன்படி, இது  கி.பி.1527 ஆம் ஆண்டு கல்வெட்டாகும். இந்த கல்வெட்டில் செண்பக ராமநல்லூரில் ஏற்கனவே கட்டப்பட்ட ராமலிங்கசுவாமி, ஜெகநாதபெருமாள் கோயில்களை மறுகட்டமைப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் காலத்தில்தான் இவ்வூருக்கு ‘செண்பகராமநல்லூர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூதள வீர உதய  மார்த்தாண்டன், தனது மகன் செண்பகராமன் என்ற மூத்த சிறைவாய்  பெயரில் இவ்வூரை நிர்மானித் துள்ளார். ஆய்வின் போது உள்ளூர் பிர முகர்கள் கடற்கரை, கோயில் அறங்கா வலர் குமார் பண்ணையார், கோபி ஆகி யோர் உடனிருந்தனர்.

விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு போராட்டம்

தமிழக அரசு தலையிட கோரிக்கை 

அவிநாசி, ஜன.17 - தேனி மாவட்ட விசைத்தறி தொழிலா ளர்கள் நடத்தி வரும் கூலி உயர்வு போராட்டத்திற்கு சுமூக தீர்வு எட்டிட, தமிழக அரசு தலையிட வேண்டும் என  சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழி லாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச்  செயலாளர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுப்பலாபுரம், ஜக்கம்மாபட்டி உள்ளிட்ட  பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  விசைத்தறி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு இரண்டு வரு டத்திற்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கப்படும். கடந்த டிசம்பர் மாதமே ஒப்பந்தம் முடிந்த நிலையில், புதிய கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை.  விசைத்தறி உரிமையாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் கடிதம் அனுப்பி யும் பேச்சுவார்த்தைக்கு அழைக்காத  நிலை உள்ளது. மேலும், மாவட்டத் தொழிலாளர் அதிகாரிக்கு தெரியப்படுத்தி யும் அவர் தலையிடாத நிலையில், கடந்த 16 நாட்களாக வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில்  ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.  திண்டுக்கல் டிசிஎல் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள்; ஆனால்  ஊதிய உயர்வு வழங்க உரிமையா ளர்கள் மறுத்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு இப்பிரச்ச னையை கொண்டு சென்றும், தலையி டாமல் அலட்சியப்படுத்தி வருகிறார். இதனால் தொழிலாளர்கள் சொல் லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். குறைந்த வருமானம், சமூக பாதுகாப்பு எதுவும் இல்லாமல்,  சமாளிக்க முடியாத வகையில் விலை வாசி உயர்ந்துள்ள இந்நிலையில், கூலி  உயர்வு வழங்க மறுப்பதை எந்த வகை யிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக முதல்வர் மற்றும் தொழிலாளர் துறை உடனடியாக தலையிட்டு, நியாய மான கூலி உயர்வு வழங்கவும், 500-க்கும்  மேற்பட்ட குடும்பங்களை பாதுகாக்க வும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.