ஜ.நா.பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ்
ஜம்மு- காஷ்மீர் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
பத்திரிகையாளர் ராணா அயூப்
நாடு தேசிய பாதுகாப்பு தொடர்பான நெருக்கடியை எதிர்கொள்ளும் போது கலைஞர்கள் நையாண்டி எழுத்தாளர்களை குறி வைப்பது ஒரு சிறந்த ஜனநாயகத்தின் முன்னுரிமையா?
பி.டி.பி. கட்சி செய்தி தொடர்பாளர் முகமது இக்பால்
எங்கள் கலாச்சாரத்தைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஒரு பேரழிவு ஏற்படும் போதெல்லாம் ஒவ்வொரு காஷ்மீரியும் அல்லாஹூ அக்பர் என்றுதான் கூறுவார்கள். ஒவ்வொரு சம்பவத்திலும் நாங்கள் அல்லாவை நினைக்கிறோம். அவர்களது தோல்வியை மறைக்க இது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி
சர்வாதிகார தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், பொது நலன் மற்றும் பொது கவலை தொடர்பான பிரச்சனைகளை எழுப்பும் பத்திரிகையாளர்கள், சேனல்கள் மற்றும் யூடியூப் சேனல்களைத் தாக்கி மூடுவதன் மூலம் மக்களின் குரலை நசுக்குகிறது.