வியட்நாம் சோஷலிச குடியரசு தின கொண்டாட்டம்
1975 ஏப்ரல் 30 அன்று அமெரிக்காவை வீழ்த்தி வியட்நாம் சோஷலிச குடியரசு அமைக்கப்பட்டது. அதன் 50 ஆவது ஆண்டு தினம் ஏப்ரல் 30 புதனன்று வியட்நாமில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டூ லாம், லாவோஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்,ஜனாதிபதி தோங்லோன் சிசோலித், வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங், கம்போடியாவின் மக்கள் கட்சியின் தலைவர் ஹன் சென், வியட்நாமின் பிரதமர் பாம் மின் சின் ஆகியோர் ஹோ சி மின் நகரில் நடைபெற்ற வெற்றிப்பேரணியில் பங்கேற்றனர்.