states

விபத்தில் சிக்கிய  ‘சுகோய்-30’ போர் விமானம்  2 வீரர்கள் பலி

விபத்தில் சிக்கிய  ‘சுகோய்-30’ போர் விமானம்  2 வீரர்கள் பலி

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ‘சுகோய்-30  எம்கேஐ (Su-30 MKI)’ போர் விமானம் வியாழனன்று மாலை அசாம் மாநி லத்தில் நடைபெற்ற பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போனது. தீவிர  தேடுதலுக்குப் பின்னர், அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதி யில் வெள்ளியன்று சுகோய்-30 விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டறியப் பட்டது. விமானம் வெடித்துச் சிதறிக் கிடந்தது.  விமானத்தில் பயிற்சியில் ஈடு பட்ட இரண்டு விமானப்படை வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த பிளைட் லெப்டினண்ட் பூர்வேஷ் துரக்கர் (நாக்பூரைச் சேர்ந்தவர்) பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் முக்கிய பங்காற்றினார் என செய்திகள் வெளியாகியுள்ளன.  சுகோய்-30 எம்கேஐ, ரஷ்யாவின் ‘சுகோய்’ நிறுவனத்தால் வடிவமை க்கப்பட்டு, இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் உரிமம் பெற்று தயாரிக்கப்படும் 2 இருக்கைகள் கொண்ட, பல்துறை போர் விமானம் ஆகும்.