திரிபுராவில் நடைபெற்று வரும் குண்டர் ஆட்சியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவோர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில், பாஜகவைச் சேர்ந்தவர்களும் மார்க்சிஸ்ட் கட்சியில் அதிகமான அளவில் இணைந்து வருகின்றனர். தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள பீர்சந்திராநகர் பகுதியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.