states

img

விடுதலைப் போரில் நாட்டை ஏமாற்றியவர் சாவர்க்கர்

விடுதலைப் போரில் நாட்டை ஏமாற்றியவர் சாவர்க்கர்

நாட்டின் விடுதலைப் போ ராட்டத்தில் பங்கேற்கா மலேயே ஆங்கிலேயரு டன் ஒத்துழைக்க தயாரானவர் சாவர் க்கர் எனவும், வரலாற்றைத் திருத்தி காவிமயமாக்க நடக்கும் முயற்சிகளு க்கு எதிராக திறம்பட செயல்படும் அமைப் பாக இந்திய மாணவர் சங்கம் உள்ளது எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  திருவனந்தபுரத்தில் இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டை பிப்.19 அன்று துவக்கிவைத்து அவர் மேலும் கூறுகையில்,” ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட் டத்தை இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தினார்கள். நாட்டில் பல மதங்கள், சாதிகள், மொழிகள் இருந்தபோதிலும் ஒற்று மையாக இருந்தார்கள். அப்போது இதிலிருந்து  விலகி நின்ற ஒரு பிரிவினர் உள்ளனர். அவர்களது கருத்து ஆங்கில ஏகாதிபத்தியம் இங்கே தொடர வேண்டும் என்பதாக இருந்தது. அது நாம் இப்போது சந்திக்கும் சங்பரிவாரமாகும். அந்த அமைப்பின் தலைவர்கள் அன் றைய ஆட்சியாளர்களை நேரில் சந்தி த்து தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வும் செய்தனர். நாட்டின் வரலாற்று பதி வில் இதுவும் இடம்பெறும். இது போன்றவற்றை பதிவு செய்தால் தங்க ளுக்கு விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். எனவே வர லாறை திருத்த வேண்டும். அது நம் கண் முன்னால் நடந்து கொண்டி ருக்கிறது

. காவிமயமாக்கல் என்பது காவி வண்ணம் பூசுவதல்ல

எந்த போராட்டம் என்றாலும் அதில் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலையும் ஏற்படும். சாதா ரணமாக எவரும் அதற்காக மன்னி ப்புக் கடிதம் கொடுப்பதில்லை. ஆனால், அந்தமான் சிறையில் வைத்து அன்று ஒருவர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார். அவர்  சங்பரிவார் இன்றும் போற்றுகிற முக்கியத் தலைவராவார். விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவரா கவே அவரை வரலாறு பதிவு செய்துள் ளது. இன்றைய ஒன்றிய அரசு அவரை உயர்ந்த இடத்தில் வைத்து சிறப்பிக்கிறது. விடுதலைப் போராட்ட வீரராக்க முயற்சிக்கிறது. எல்லோரும் அறிந்த சாவர்க்கர்தான் அவர். இது வரலாற்றை திருத்துவதன் ஒரு உதா ரணம்.  காவிமயமாக்கல் என்பது காவி வண்ணம் பூசுவதல்ல. இது போன்ற தலையீடுகள் தான். அத்த கைய முயற்சிகளுக்கு எதிராக நமது நாட்டில் பெரும் எதிர்ப்பும் போராட்டங்களும் எழுந்து வருகின் றன. இதில் வலுவான தலையீடு செய்யும் அமைப்பு இந்திய மாணவர் சங்கம் என்பது பாராட்டுக்குரியது” என அவர் கூறினார்.