states

img

தில்லி முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றார்

அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டமன்றத் தேர்தலில் 48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில், தில்லி முதலமைச்ச ரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் புதன் கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் ஷாலிமார் பாக் தொகுதியில் வெற்றி பெற்ற ரேகா குப்தா தில்லி முதலமைச்சராக தேர்ந்தெ டுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து வியாழனன்று தில்லி ராம்லீலா மைதா னத்தில் நடைபெற்ற விழாவில் முதல மைச்சராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு பதவிப்பிரமா ணம் செய்து வைத்தார்.  

துணை முதலமைச்சர்  பர்வேஷ் வர்மா

ரேகா குப்தாவுடன் பர்வேஷ் வர்மா (புதுதில்லி), ஆஷிஷ் சூட் (ஜனகபுரி), மஞ்சிந்தர்  சிர்ஷா (ரஜோரி கார்டன்), ரவீந்தர் இந்தரராஜ் சிங் (பாவனா), கபில் மிஸ்ரா (கரவால் நகர்) மற்றும் பங்கஜ் குமார் சிங் (விகாஷ்புரி) என 6 பேர் தில்லி அமைச்சர்களாக பதவி யேற்றுக் கொண்டனர். இதில் பர்வேஷ் வர்மா துணை முதலமைச்சராக அறி விக்கப்பட்டுள்ளார்.