“நரகமா? பாகிஸ்தானா?”
திரைத்துறை தொடர்பான நிகழ்வில் ஜாவேத் அக்தர் “நரகமா? பாகிஸ் தானா?” என்ற தலைப்பில் பேசி பாராட்டைப் பெற்றுள்ளார். இதுதொ டர்பாக அவர் பேசுகையில்,”நிறைய பேர் என்னைப் பாராட்டுகின்றனர், புகழ்கின் றனர். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு புறமும் இருந்து பலர் என்னைத் திட்டவும் செய்கின்றனர். ‘நீ மதநம்பிக்கையற்றவன், அதனால் நரகத் துக்குப் போ’ என்கின்றனர் ஒரு நாட்டி னர் (பாகிஸ்தான்). அதேநேரத்தில், ‘நீ ஒரு ஜிகாதி, அதனால் பாகிஸ்தானு க்குப் போ’ என்கின்றனர் மற்றொரு நாட்டி னர் (இந்தியா). நரகமா இல்லை பாகிஸ் தானா என்று இரண்டில் ஒன்றை என்னைத் தேர்வு செய்யச் சொன்னால், நான் நரகத்துக்குச் செல்லவே விரும்பு வேன்” என அவர் கூறினார்.
வெளிநாடு செல்லும் அனைத்துக் கட்சிக் குழுவில் திரிணாமுல் விலகல் “
ஆபரேசன் சிந்தூர்” தாக்குதலை உலகநாடுகளுக்கு எடுத்து ரைக்க மோடி அரசு 7 குழுக்களை அமைத் துள்ளது. பல கட்சிக ளைச் சேர்ந்த எம்.பி., க்கள் 7 குழுவி லும் இடம் பெற்று ள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வா தியாக மாறிய யூசுப் பதானை ஒன்றிய அரசு நியமித்தது. இந்நிலையில், வெளிநாடு செல்லும் அனைத்துக் கட்சிக் குழுவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகு வதாக அறிவித்துள்ளது. இதுதொடர் பாக அக்கட்சியின் பொதுச் செயலா ளர் அபிஷேக் பானர்ஜி கூறுகையில், ‘‘அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை அனுப்பும் அரசின் நடவடிக்கை வரவேற் கத்தக்கது. ஆனால் பாஜக அல்லாத கட்சி கள் என்று வரும்போது அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் ஒரு பகுதியாக யாரை அனுப்புவது என்பதை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு முடிவு செய்ய முடியாது. எங்கள் கட்சியிலி ருந்து யார் செல்ல வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். ஒன்றிய அரசு அல்ல. அதனால் யூசுப் பதானோ அல்லது திரிணாமுல் காங்கிர ஸின் வேறு எம்.பி.,க்கள் யாருமோ அனைத்துக் கட்சிக் குழுவில் இடம் பெற மாட்டார்கள்” என அவர் கூறியுள்ளார்.