மழைக்கால நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்
அதிகாரிகளுக்கு கேரள அரசு உத்தரவு
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள் ளது. வயநாடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு உள் ளிட்ட வடக்குப் பகுதி மாவட்டங்க ளில் ஆரஞ்சு எச்ச ரிக்கை அளவில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை தீவிரமடைந்து வருவதால் பேரிடர் மீட்பு, வடிகால்களை சுத்தம் செய்தல் மற்றும் நிவாரண முகாம் போன்றவற்றை தயார் நிலையில் வைக்க அதிகாரிகளுக்கு கேரள மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொ டர்பாக பல்வேறு துறைகளின் பருவ மழை தயார் நிலை குறித்து ஆலோச னைக் கூட்டத்தில் கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் கூறுகையில்,”செவ்வாய்க்கிழமைக்குள் (மே 20) பருவமழைக்கு முந்தைய அனை த்து பணிகளையும் அவசரமாக முடித்து, மாவட்ட அளவிலான திட்டமிடல் கூட்டங்களை மாவட்ட நிர்வாகங்கள் கூட்ட வேண்டும். பருவமழை தொடர் பான பேரிடர்களை சமாளிக்க ஒவ் வொரு மாவட்டமும் ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும். மாவட்ட மற்றும் தாலுகா மட்டங்களில் மீட்பு அமைப்புகளை தாமதமின்றி செயல் படுத்த சரியான பயிற்சி அவசியம்” என அவர் கூறினார்.