states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா

இந்து மதத்தைப் பின்பற்றும் ஒரு இந்துவால், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான அன்பை நேரடியாக ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், இந்துத்துவாவை பின்பற்றுபவர் அதை ‘லவ் ஜிகாத்’ என்று கூறுவார். இறைச்சி உண்ணும் ஒரு வங்காள இந்து, காளிக்கு இறைச்சியைப் படைப்பார். ஆனால், இந்துத்துவாவை பின்பற்றுபவர் அது தவறு என்று கூடி பிரச்சனை செய்வர்.

தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி., சவுத்ரி முகமது

ஜம்மு-காஷ்மீரில் “இந்தியா” கூட்டணி ஆட்சி நடைபெற்றாலும், சட்டம் - ஒழுங்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் கையில் உள்ளது. அதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பள்ளிவாசல்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? என்பதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெனவே பள்ளிவாசல் கமிட்டிகள் உள்ளன. எத்தனை பள்ளிவாசல்கள் ; அவை எந்த நிலத்தில் அமைந்துள்ளன போன்ற அனைத்து விவரங்களும் வருவாய், காவல் துறை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிறகு ஏன் பள்ளிவாசல்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும்? 

ஆம் ஆத்மி கட்சி

உத்தரப்பிரதேச வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான  வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது பெரிய அளவிலான முறைகேடு ஆகும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.