states

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஆயிரக்கணக்கான  மக்கள் ஏமனில் போராட்டம்

அமெரிக்க ராணுவம் ஏமன் தலைநகர் உட்பட முக்கிய நகரங்களில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 53 நபர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 90 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஹவுதி கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. மேலும் அமெரிக்கக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து ஏமனில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதியை தாக்க திட்டம் :  கூலிப்படை தலைவன் கொலை

கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட கூலிப்படை தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான். பிராங்கோ வளைகுடா கிளான் என்ற குற்றக்கும்பலின் உயர்மட்டத் தலைவரின் நெருங்கிய நண்பனான 25 வயதான சாண்டாண்டர் பிராங்கோ ஜிமினெஸ்-ஐ அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது. இதனை கொலம்பிய பாதுகாப்பு அமைச்சரும் ஜெனரல் லூயிஸ் கார்லோஸ் கார்டோபா தெரிவித்துள்ளார்.

நலத்திட்ட உதவிகளை வெட்டும் இங்கிலாந்து

இங்கிலாந்து அரசு ஊனமுற்றோர் மற்றும் நீண்ட கால சுகாதார உதவிகள் பெற்று வருபவர்களுக்கான நிதி உதவிகளை வெட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம், பொருளாதாரத் தேக்கத்தை சமாளிக்க நலத்திட்ட உதவிகளை தேவையற்ற செலவு என கூறி வெட்டும் அரசின் முடிவுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இதே நேரத்தில் இங்கிலாந்து அரசு உக்ரைன் போருக்கு ராணுவ உதவி செய்வது குறிப்பிடத்தக்கது.

திரையரங்கில் தஞ்சமடைந்திருந்த  புலம்பெயர்ந்தோர் துரத்தல்!

பிரான்சில் மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்கில் தஞ்சமடைந்திருந்த 400 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை துரத்தியுள்ளது அந்நாட்டு காவல்துறை. மாற்று இடம் வழங்காமல் அவர்களை தெருவில் தள்ளும் இந்த செயலை கண்டித்து  நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். டிசம்பர் 10 முதல் குழந்தைகளுடன் ஆதரவற்ற மக்கள் அத்திரையரங்கிற்குள் தஞ்சம் அடைந்ததால் திரையரங்கு செயல்பாடுகளை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

முதல் பயணமாக பிரான்ஸ்  சென்ற கார்னி

கனடா பிரதமராக பதவி ஏற்றுள்ள கார்னி முதல் வெளிநாட்டு பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். கனடா பிரதமராக பதவி ஏற்பவர்கள் முதலில் அமெரிக்க ஜனாதிபதியையே சந்திப்பார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் நடைபெற்று வருகின்றது. அதே நேரத்தில் அமெரிக்காவுடன் உடன்படாமல் உக்ரைன் போரை தொடர்ந்து நடத்த பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் முயற்சித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

தூங்கிக் கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் மீது குண்டு வீசி இஸ்ரேல் கொடூர தாக்குதல் : 326 பேர் படுகொலை 

அதிகாலை 2.30 மணிக்கு  தூங்கிக் கொண்டி ருந்த பாலஸ்தீனர்கள் மீது கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசி கொடூரமான இனப்படு கொலையை மீண்டும் அரங்கேற்றியுள்ளது இஸ்ரேல் ராணுவம். ஜனவரி 19 அன்று முதல் கட்ட போர் நிறுத்தம் துவங்கி மார்ச் 1இல் முடிவடைந்தது. முதல் கட்ட போர் நிறுத்தம் அமலான 16 நாட்களிலேயே இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை துவங்கி இருக்க வேண்டும். ஆனால் இஸ்ரேல் ஒத்துழைக்காததால் பேச்சுவார்த்தை நடக்காமல் உள்ளது.  326 பேர் படுகொலை இந்நிலையில் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தை  மீறி இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனர்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.   தற்போது 326 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது என காசா பகுதிக்கான சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது மட்டுமல்ல, போர்நிறுத்தம் துவங்கிய ஜனவரி 19 முதல் இஸ்ரேல் ராணுவம் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி 100 க்கும் மேற்பட்ட தாக்குதலை நடத்தியுள்ளது.  இந்த தாக்குதல் மேலும் தொடரும் எனவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தாக்குதல், போர்நிறுத்தத்தை இஸ்ரேல்  ஒருதலைப்பட்சமாக ரத்து செய்து விட்டது என்பதைத்தான் காட்டுகின்றது என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் நேதன்யாகு வும் அவரது தீவிரவாத அரசும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவெடுத்துவிட்டது என தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய அமைப்பு கண்டனம் ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்ட வர்களின் குடும்பங்கள் உருவாக்கிய பணயக்கை திகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் மன்றம் என்ற அமைப்பு, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து ஏன் பின்வாங்கினீர்கள் என இஸ்ரேல் அரசை கேள்வி கேட்டுள்ளது. இத்தாக்குதலின் மூலம் பணயக் கைதிகளை விட்டுக்கொடுத்து விடலாம் என இஸ்ரேல் அர சாங்கம் முடிவெடுத்துள்ளது எனவும் ஹமாஸ் அமைப்பின் சிறையில் இருந்து எங்கள் குடும்ப உறுப்பினர்களை மீட்பதற்கு மாறாக அந்த கோரிக்கையை வேண்டுமென்றே இஸ்ரேல் நிரா கரித்துவிட்டது எனவும் நேதன்யாகு தலைமை யிலான இஸ்ரேல் அரசாங்கத்தை இந்த அமைப்பு கண்டித்துள்ளது.” ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பு, மீண்டும் துவங்கப்பட்ட ஆக்கிரமிப்புப் போரை கண்டித்துள் ளன. மேலும் இந்தப் போரில் பாலஸ்தீன மக்கள் தனியாக விடப்படமாட்டார்கள். ஏமன் பாலஸ்தீனர் களுக்கான ஆதரவையும் உதவியையும் தொடரும் என அறிவித்துள்ளனர்.  ஐ.நா அவை சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மோசமான விளைவுகளை உரு வாக்கும் வகையிலான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளன.