பாஜக ஒன்றிய அரசின் பழிவாங்கலின் முன் கேரள மக்கள் மண்டியிட மாட்டார்கள்
வயநாடு இயற்கைப் பேரி டர் நிகழ்ந்து 8 மாதமாகி யும் ஒரு பைசா கூட நிதி வழங்காத பாஜக அரசின் மனிதாபி மானமற்ற அணுகுமுறைக்கு, அர சியல் பழிவாங்கலுக்கு கேரளா மக்கள் அஞ்சமாட்டார்கள் , மண்டி யிட மாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்க ளவை உறுப்பினர் ஏ.ஏ. ரகீம் சவால் விடுத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை அன்று மாலை மாநிலங்களவையில் பேரிடர் நிர்வாகத் திருத்தச் சட்டமுன்வடி வின் மீது ஏ.ஏ.ரகீம் கலந்துகொண்டு பேசியதாவது: 2024 ஜூலை 30 அன்று கேரளம், வயநாட்டில் ஒருநாளிரவில் சுமார் 86 ஆயிரம் சதுர மீட்டர்கள் நிலம் அழிவுக்குள்ளானது. 266 பேர் தங்கள் உயிர்களை இழந்தார்கள், 32 பேர் நிலச்சரிவுக்குள் சிக்கிக் காணாமல் போயிருப்பதாக அறி விக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், ஊராட்சி மன்றங்கள், மின்சார வாரிய அலுவ லகம் மற்றும் 136 சமுதாயக் கட்டி டங்கள் உட்பட 1,555 வீடுகளுக்கும் மேலானவை அழிந்தன. இவ்வாறு அழிவுக்கு உள்ளான அனைவ ருமே இந்தியப் பிரஜைகள்தான். அனைவரும் இந்தியர்களே.
8 மாதமாகியும் ஒருபைசா கூட வழங்கவில்லை
நான் வயநாட்டின் பேரிடர் குறித்தும் வயநாடு மக்களின் அவல நிலை குறித்தும் பேசுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கி றேன். இந்தத் துயர் மிகு சம்பவம் நிகழ்ந்து எட்டு மாதங்களாகி விட்டது. ஆயினும் இன்றுவரையி லும் நான் இந்த அவையில் உங்கள் முன் நின்றுகொண்டிருக்கும் இந்த நேரம் வரையிலும், ஒன்றிய அர சாங்கம் என்னுடைய மாநிலமான கேரளாவிற்கு ஒரு பைசா கூட பாதிக் கப்பட்ட மக்களுக்காகக் கொடுக்க முன்வரவில்லை. இதனை உங்க ளால் கற்பனை செய்ய முடிகிறதா? இந்த அரசாங்கத்தின் இத்த கைய மனிதாபிமானமற்ற அணுகு முறையுடன் நீங்கள் அனைவரும் ஒத்துப்போகிறீர்களா என்று அரசி யலுக்கு அப்பாற்பட்டு நின்று, நான் கேட்க விரும்புகிறேன்.
அற்பத் தொகை...
எங்களுக்கு எதிரான ஒன்றிய அரசாங்கத்தின் இத்தகைய அணுகுமுறை இதுபோன்ற தனித்த ஒன்று அல்ல. என்னிடம் ஓர் ஆவ ணம் இருக்கிறது. இதனை நான் சாட்சியத்துடன் கூற முடியும். மாநில பேரிடர் மீட்பு நிதியத்திற்கு (SDRF-State Disaster Response Fund) ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி எவ்வ ளவு? 2024-25ஆம் ஆண்டில் ஒன்றிய அரசாங்கம் கேரளாவிற்கு ஒதுக்கி யது 291 கோடி ரூபாயாகும். இதே சமயத்தில் அது குஜராத்திற்கு 1,226 கோடி ரூபாயும், மத்தியப் பிர தேசத்திற்கு 1,686 கோடி ரூபாயும், உத்தரப்பிரதேசத்திற்கு 1,791 கோடி ரூபாயும், மகாராஷ்டிராவி ற்கு 2,000 கோடி ரூபாய்க்கு மேலும், மிகச்சிறிய மாநிலமான ஹரியானா விற்குக் கூட 455 கோடி ரூபாயும் ஒதுக்கியிருக்கிறது. வட கிழக்கு மாநிலங்களுக்குப் பின்னர் கேரளா தான் மிகச் சிறிய அளவில் பங்கி னைப் பெற்றிருக்கிறது.
வீடுகளுக்கு அடிக்கல் நாட்டல்
கடந்த சில ஆண்டுகளாக கேர ளா இயற்கைச் சீற்றங்களாலும், ஒக்கி புயல் மற்றும் வெள்ளம் போன்றவற்றாலும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. ஆயினும் ஒன்றிய அரசாங்கம் இவ்வாறு மிக அற்பத்தொகையை ஒதுக்கி இருக்கிறது. ஆயினும் நாங்கள் உங்களிடம் சரண டைந்திட மாட்டோம். இன்றோ அல்லது நாளையோ கேரள முதல மைச்சர் தோழர் பினராயி விஜயன் வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்க ளுக்கான புதிய நகரக்குடியிருப் பிற்கான அடிக்கல் நாட்டுகிறார். உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஒவ்வொரு வீட்டிற்கும் 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை மதிப்பிட்டிருக்கிறோம். இதனை இந்த அவையில் பெருமிதத்துடன் நான் கூறிக்கொள்ள முடியும். இது கேரளாவின் தில். (This is the will of Kerala). நாங்கள் ஒருபோதும் ஒன்றிய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் முன் தலைவணங்க மாட்டோம்.
இளைஞர்கள் வழங்கிய 20 கோடி
திங்களன்று மாலை, எங்கள் அமைப்பான, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வயநாடு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதற்காக 20 கோடி ரூபாயை கேரள மாநில அரசிடம் ஒப்படைத்திருக்கிறது என்று பெருமிதத்துடன் கூறிட முடியும். இந்தத்தொகையை நாங்கள் எப்படி வசூலித்தோம் என்று உங்க ளால் கற்பனை செய்ய முடியுமா? எங்கள் கிராமப்புற இளைஞர்கள் கிராமங்களில் கூலி வேலை செய்தும், தின்பண்டங்கள் விற்றும் அவற்றால் கிடைத்த தொகையை ஒன்றுதிரட்டி இவ்வாறு அளித்துள் ளார்கள். வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கேரளாவில் உள்ள அனைத்துத்தரப்பினரும் அரசிய லுக்கு அப்பாற்பட்டு நின்று, சாதி, மதம், பாலினம் கடந்து கேரளாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி யினரும் இணைந்து கேரளாவின் அனைத்துக் குழுவினரும் ஒன்று பட்டு நின்று இந்தக் காரியத்தைச் செய்துள்ளார்கள்.
கடுமையான இயற்கைப் பேரிடர் அறிவிப்பு
கடைசியாக நீண்ட கால இடை வெளிக்குப்பின்னர் வயநாடு நிலச்சரிவுகள் “கடுமையான இயற்கைப் பேரிடர்” (“severe nature”) என்று அறிவிக்கப்பட்டி ருக்கிறது.
எம்.பி.,க்கள் நிதி
நான் இங்கேயுள்ள நாடாளு மன்ற உறுப்பினர்கள் அனைவரி டமும் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வய நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்காக உங்களுடைய பங்களிப்பினைச் செய்திடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுவே என்னுடைய தாழ்மை யான வேண்டுகோள். கேரளாவைச் சேர்ந்த இடதுசாரி உறுப்பினர்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பி னர் நிதியிலிருந்து நிதி அளித்திருக்கிறோம்.
காங்., எம்.பி.க்களும் வழங்க வேண்டும்
ஆனாலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் வயநாடு தொகுதியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி உட்பட எவரும் இதுவரை நிதி எதுவும் அளித்திடவில்லை. அவர்களும் நிதி அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனவே எக்காரணம் கொண் டும் கேரள மக்கள் ஒன்றிய அர சாங்கத்தின் பழிவாங்கல் நடவ டிக்கையின் முன் மண்டியிட மாட் டோம் என்று மீண்டும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கி றேன்.