முதல் பிலிப்போஸ் மார் கிறிசோஸ்டம் விருது
ஏப்.24இல் எம்.ஏ.பேபிக்கு முதலமைச்சர் வழங்குகிறார்
முதல் பிலிப்போஸ் மார் கிறி சோஸ்டம் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபிக்கு வழங் கப்பட உள்ளது. இந்த விருது ஐம்ப தாயிரம் ரூபாய் ரொக்கம், கலைஞர் பட்டத்திரி வடிவமைத்த தகடு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வரும் 24ஆம் தேதி மாராமனில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த விருதை வழங்க உள்ளார். அறக்கட்டளையையும் முதலமைச்சர் துவக்கி வைப்பார் என நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர். அரசியல், சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் இந்த விருதுக்கு பரிசீலிக்கப்பட்டனர். எம். ஏ. பேபி, மார் கிறிசோஸ்டமின் நெரு ங்கிய நண்பராக இருந்தார். அவர் ‘பிலிப்போஸ் மார் கிறிசோஸ்டம் தி கிரேட் மெட்ரோபொலிட்டன்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதி யுள்ளார். இந்தப் புத்தகம் ‘கிறிஸ்து, மார்க்ஸ், ஸ்ரீ நாராயண குரு’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக நடுவர் குழு மதிப்பிட்டது. மலையாள சினிமா மற்றும் கலாச்சாரத் துறைகளுக்கு சிறந்த பங்களிப்புகளைச் செய்தவரும், அறக்கட்டளை வாரிய உறுப்பினருமான இயக்குனர் பிளெஸ்ஸியும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்படுவார் என்று அறக்கட்டளை செயலாளர் ராஜன் வர்கீஸ், இணைச் செயலாளர் டி.எம். சத்யன், பொருளாளர் செரியன் சி. ஜான் உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.