states

img

ஸ்கேன் இந்தியா

பழிக்குப்பழி மகாராஷ்டிர மாநிலத்தில் தங்களை அதிகா ரத்தில் அகற்றிய ஏக்நாத் ஷிண்டேவைப் பழி வாங்க உத்தவ் தாக்கரே முடிவெடுத்திருக்கி றாராம். ஒன்றுபட்ட சிவசேனாவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களோடு பிரிந்து போய் பாஜகவுடன் இணைந்து கொண்டவர் ஏக்நாத் ஷிண்டே. மும்பை மாநக ராட்சியில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காத தால் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார். இவரைப் பல வீனப்படுத்த உத்தவ் தாக்கரே, பாஜகவுக்கு ஆதரவுக் கரம் நீட்ட முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியா கின்றன. மும்பை மாநகர மேயர் தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, வாக்கெடுப்பில் பங்கெடுக் காமல் இருந்தால் பாஜகவுக்கு, ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவு தேவையில்லை. இதுதான் உத்தவ்தாக்கரேயின் உத்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கி றார்கள்.  ஏட்டிக்குப் போட்டி மேற்கு வங்கத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியில் பட்டியலில் இருந்து யாரும் விடு பட்டுவிடக்கூடாது என்பதற்காக செந் தொண்டர்கள் வீடு, வீடாக மக்களைச் சந்தித்தனர்.கொரோனா மற்றும் 2021 புயல் (யாஷ்) காலத்திலும் மக்களோடு, மக்களாக நின்ற இந்தத் தொண்டர்க ளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் அவர்களுக்காகக் களத்தில் இறக்கியது. ஒரு புறம்,ஊடுருவல்காரர்கள் ஒரு கோடிப்பேர் இருக்கிறார்கள் என்று பாஜகவும், மறுபுறத்தில் பட்டியல் தில்லுமுல்லுகளை அரங் கேற்றும் முயற்சியில் திரிணா முலும் ஏட்டிக்குப்போட்டி யாக இயங்கின. திரிணாமுல் காங்கிரசோ, இந்தச் சீர்திருத்தத் தில்லுமுல்லுகளைச் செய்ய தேர்தல் உத்தி நிறுவனம்“ஐ-பேக்” ஐ அமர்த்திக் கொண்டிருக்கி றது. மலைகள், கடற்கரைகள், காடுகள், ஏழைக் குடி யிருப்புகள் என்று செந்தொண்டர்கள் கால் பதித்தனர். மற்ற இரண்டு கட்சிகளோ, ஒருவரையொருவர் அரசிய லாக நேர்எதிரே நிறுத்திக் கொள்வதில் மும்முரமாக உள்ளன. ரத்தத்துக்கு ரத்தம் திரிபுராவில் பாஜகவும், அதன் கூட்டாளிக்கட்சியான திப்ரா மோதாவும் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வது ஒருபுறம், மறுபுறத்தில் பாஜகவுக்குள் உட்கட்சி மோதல்கள் அடிக்கடி வெடிக்கின்றன. வாய்ச் சண்டையெல்லாம் கிடையாது. வெட்டிக் கொள்கி றார்கள். குண்டு வீசிக் கொள்கிறார்கள். தங்களுக்குள் நடக்கும் சண்டை என்பது அம்பலமாகையில், மதச்சா யம் பூசும் முயற்சி நடக்கிறது. கைலாஷாகர் நகரின் பல  பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மோதல்கள்  நடக்கின்றன. ஒப்பந்தப்பணிகளை யார் எடுப்பது என்பதுதான் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையா கும். கட்சி அலுவலகத்தையே கொளுத்தி விட்டார்கள்.  உட்கட்சி மோதலை மறைக்க, அருகில் உள்ள இஸ்லாமியர் பகுதி மீது பழி போடவும் முயற்சித்துள்ளனர். இரு கும்பல்களும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவை என்பதால் காவல்துறை ஆமை வேகத்தில் நகர்கிறது. பதிலுக்குப் பதில் பாஜகவின் பிளவுவாத அரசியலால் மணிப் பூர் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகள் போல் முகாம்களில் வசிக்கிறார்கள். வன்முறைகள் தொடர்கின்றன. மக்க ளால் தேர்வு செய்யப்பட்ட அரசு இல்லை. இந்நிலையில், குக்கி தரப்பினரின் தாக்குதலில் 38 வயதான ரிஷிகந்தா உயிரிழந்தார். அவரது இறந்த உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர், இந்த வன்முறை தொடரக்கூடாது. நாங்கள் பதிலுக்கு பதில் எதிர்த்தரப்பில் உயிரிழப்பு என் பதை விரும்பவில்லை. குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறி வித்த நிர்வாகம், விசாரணையை தேசிய புலனாய்வு மையத்திடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தது. ரிஷிகந்தா, குக்கி இனத்தைச் சேர்ந்த பெண்ணைக் காத லித்துத் திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.