ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பதற்றமான சூழல்
பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீர் பஹல் ்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பின் ஏப்ரல் 24ஆம் தேதி இரவில் எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வும், இந்திய ராணுவம் தக்க பதிலடியை கொடுத்து வருவ தாகவும்செய்திகள் வெளி யாகின. இந்த தாக்குதலுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் நாடு களின் ராணுவ செயல்பாட்டு தலைமை இயக்குநர்கள் ஏப்ரல் 29ஆம் தேதி தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படு கிறது. ஆனாலும் இந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னர் பாகிஸ்தான் ராணுவம் வடக்கு காஷ்மீரின் குப்வாரா, பார முல்லா மாவட்டங்களின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி களில் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் பலமுறை தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தொடர்ந்து வியாழனன்று ஜம்மு-காஷ்மீரின் 5 மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதி யில் 8ஆவது நாளாக வியாழக் கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்ப வங்களில் ஈடுபட்டு வருவதால் ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது.