மேற்குவங்கத்தில் ஆசிரியர்கள் மீது தடியடி
திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆசிரியர்களை நியமனம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில் 25,000 ஆசி ரியர்களின் பணி நியமனத்தைத் ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்த நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3 அன்று உறுதி செய்துள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையடுத்து மேற்கு வங்க அர சுக்கு எதிராக பாதிக்கப்பட்ட ஆசிரியர் கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது மேற்குவங்க காவல்துறை தடியடி நடத்தியதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.