states

img

வாட்ஸ் அப்பிற்கு தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு

முகநூலின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்துக்குச் சொந்த மானது வாட்ஸ் அப் (WhatsApp) செயலி ஆகும். பாதுகாப்பான பிரை வேசி அம்சங்களுடன் இயங்கும் வாட்ஸ் அப் செயலி மூலம் போலியான தகவல் பரவிவருவதாகவும்,  நாட்டின் தகவல் தொலைத்தொடர்பு சட்டங்களை மீறுகிறது என்றும், அத னால் வாட்ஸ் அப் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என கே.ஜி.ஓமனக் குட்டன் என்ற கேரளவைச் சேர்ந்த சாப்ட் வேர் இன்ஜினியர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்தமனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமார் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழ னன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்திற்குப் பின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.