states

img

இடைக்காலமாக பணியாற்ற மேற்குவங்க ஆசிரியர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

இடைக்காலமாக பணியாற்ற மேற்குவங்க ஆசிரியர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறையில் காலியாக இருந்த 24,640 பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வின்  இறுதியில் 25,753 பேருக்கு பணி  நியமன ஆணைகள் வழங்கப் பட்டன. இந்த தேர்வுக்காக ஓய்எம்ஆர் தேர்வுத்தாள் மற்றும் தரவரிசை தயாரிப்பு எனப் பல நிலைகளில் மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி 25,753 பேரின் நியமனங்களை செல்லாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு  தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை ஏப்ரல் 7ஆம் தேதி உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ஊழல் மிக்க ஆட்சியை கண்டித்தும் கடந்த ஒரு வார காலமாக ஆசி ரியர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்த போராட்டத்தை கண்டு  மிரண்ட மம்தா பானர்ஜி அரசு  உச்சநீதிமன்றத்தில் இடைக் கால நிவாரணம் கோரி மனு தாக்கல் செய்தது. அந்த மனு வில்,”மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நிய மிக்கப்படும் வரை பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியைத் தொடர அனுமதிக்க  வேண்டும்” என அதில் கூறப்  பட்டது. இதனை ஏற்றுக்  கொண்ட உச்சநீதிமன்றம், “புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியில் தொடர லாம். ஆனால் மாணவர்கள் கல்  வியில் எந்த பாதிப்பும் ஏற்படக்  கூடாது. குறிப்பாக மேற்கு வங்க  பள்ளிக் கல்வித் துறைக்கு உட னடியாக ஆசிரியர் பணி நிய மனம் தொடர்பான விளம்ப ரத்தை மே 31ஆம் தேதிக்குள்  வெளியிட்டு, தேர்வு நடைமுறை களை டிசம்பர் 31ஆம் தேதி யுடன் நிறைவு செய்ய வேண் டும்” என உச்சநீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது.