வங்கி கடன் தள்ளுபடியில் விருப்புரிமையைப் பயன்படுத்த ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
வயநாடு நிலச்சரிவு
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை - சூரல்மலை நிலச்சரி வால் ஏற்பட்ட பேரிடரில் பாதிக்கப்ப ட்டவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்து பேரி டர் மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 13இன் படி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் ஒன்றிய அரசும் இந்த விருப்புரி மையைப் பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி யது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார், எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறப் பட்டுள்ளதாவது, இந்தச் சந்தர்ப் பத்திலும் கூட, கடன்களைத் தள்ளுபடி செய்யத் தயாராக இல்லாததன் மூலம் ஒன்றிய வங்கி கள் ஒரு இதயமற்ற நிலைப் பாட்டைக் கடைப்பிடிக்கின்றன. கேரள வங்கி கடனை தள்ளுபடி செய்துவிட்டதா என்று கேட்ட நீதி மன்றம், மற்ற வங்கிகள் பெரிய தொகையை ஏன் தள்ளுபடி செய்யக்கூடாது என கேள்வி எழுப்பியது. பேரிடர் பாதிக்கப்பட்டவர்க ளின் கடன்கள் தள்ளுபடி செய்யப் படாது என்றும், திருப்பி செலுத்தும் காலத்தை மட்டுமே தற்காலிக மாக நீட்டிக்க முடியும் என்றும் ஒன்றிய அரசு மீண்டும் அறிவித்த தை அடுத்து சிறப்பு நீதிமன்றம் தலையீடு செய்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் கடன் தள்ளுபடியை அனு மதிக்காது என்பதை ஒன்றிய அரசு மீண்டும் வலியுறுத்தியது. கடன் தள்ளுபடிகள் வங்கிகளின் விருப் பப்படி உள்ளன என்றும், கொரோ னா காலத்தில் கூட கடன் தள்ளு படி செய்யப்படவில்லை என்றும் ஒன்றிய அரசு தரப்பில் விளக்கப் பட்டது. அதை ஏற்காத நீதிமன்றம் முண்டக்கை துயரத்தை கொரோ னா சகாப்தத்துடன் ஒப்பிடக் கூடாது என்றும், ஒரே இரவில் உயிர்களையும் வாழ்வாதாரங்க ளையும் இழந்தவர்களின் நிலைமை வேறுபட்டது என்றும் கூறியது. ஒன்றிய அரசே இதை ஒரு பெரிய பேரழிவாக அறி வித்துள்ளது. எனவே, கடன் தள்ளுபடி பிரச்சனையை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்றது. மேலும், வாழ்வாதாரத்தை இழந்த வர்கள் எவ்வாறு கடனை திருப்பிச் செலுத்துவார்கள் என்றும் கேட்டது, கேரள வங்கி சுமார் 5 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஒன்றிய அரசு தரப்பில் ஆஜ ரான கூடுதல் சொலிசிட்டர் ஜென ரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும், கடன் மறுசீரமைப்பு மட்டுமே சாத்தியமான வழி என்றும் விளக்கி னார். 12 வங்கிகள் 3,220 கணக்கு கள் மூலம் பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.35.30 கோடி மதிப்புள்ள கடன்களை வழங்கி யுள்ளன. இதில் சுமார் 15.44 கோடி கேரள கிராமீன் வங்கி வழங்கி யதாகும். கேரள வங்கி ரூ.4.98 கோடியை தள்ளுபடி செய்துள் ளது.