பஹல்காம் தாக்குதல் பற்றி கட்டுரை வெளியிட்டதற்காக தேசத்துரோக வழக்கு
பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணு வம் “ஆபரேசன் சிந்தூர்” என்ற பெயரில் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக உண்மைத் தன்மை பற்றி பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. ஆனால் இதுதொ டர்பாக மோடி அரசு நாடாளுமன்றத்தில் கூட உறுதியான தகவல் அளிக்கவில்லை. சர்வதேச ஊடகங்களின் மேற்கோள்படி “தி வயர்” இணைய இதழ் ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக கட்டுரை ஒன்றை வெளியிட்டது. இந்த கட்டுரையால் அதிர்ச்சி அடைந்த மோடி அரசு, “தி வயர்” இணைய இதழை முடக்கியது. கட்டுரை நீக்கப்பட்ட பின்பு “தி வயர்” இதழ் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து செவ்வாய்க்கிழமை அன்று “ஆபரே சன் சிந்தூர்” கட்டுரைக்காக “தி வயர்” இணைய இதழின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், மூத்த ஊடகவியலாளர் கரண் தாப்பர் மீது தேசத் துரோக வழக்கு பிரிவின் (பிஎஸ்எஸ் 152) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் (மே 9 - பதிவு) மூலம் பாஜக ஆளும் அசாம் காவல்துறை (கவு காத்தி குற்றப்பிரிவு) சம்மன் அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்றம் தடை இதனை எதிர்த்து “தி வயர்” செய்தி இணைய தளத்தை சித்தார்த் வரதராஜனுடன் இணைந்து நிர்வகிக்கும் “தனி ஊடகங்களின் அறக்கட்ட ளை” உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை அன்று நீதிபதிகள் சூர்யா காந்த், ஜாய்மால்யா பாக்சி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பத்திரிகையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன், “அசாம் காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி பத்திரிகையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் கவு காத்தி குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் இரு பத்திரிகையாளர்களும் கைது செய்யப்படும் வாய்ப்புள்ளது” என வாதிட்டார். இதனையடுத்து நீதிபதிகள் சூர்யா காந்த், ஜாய்மால்யா பாக்சி,“இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வரு கிறது. அசாம் காவல்துறை பதிவு செய்துள்ள எப்ஐஆர்-இன் அடிப்படையில் பத்திரிகையா ளர்கள் இருவர் மீதும் கைது நடவடிக்கை எதை யும் மேற்கொள்ளக் கூடாது. பத்திரிகையா ளர்கள் காவல்துறை விசாரணைக்கு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்” என உத்தர விட்டனர்.