states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்

ஒன்றிய பாஜக அரசு பஞ்சாப் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. மாநிலத்தின் மொத்தமுள்ள 1.53 கோடி ரேஷன் கார்டுகளில் இருந்து 55 லட்சம் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியை நிறுத்தி உள்ளது. கேஒய்சி ஆவணங்கள் செய்யப்படாததன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது என மோடி அரசு அலட்சியமாக பதில் அளிக்கிறது. இது மிகவும் மோசமானது.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

மோடிக்கு எதிராக பேசியதால் என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன். வெற்றுப் பேச்சு என்ற வார்த்தையை பயன்படுத்தியது ஒரு குற்றமா? மோடி உள்ளிட்ட பாஜகவினர் உண்மையைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆனால் உண்மையை தொடர்ந்து பேசுவேன்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அஜோய் குமார்

இந்தியாவின் நலன்களே முதலிடம் பெற வேண்டும். ஆனால் பிரதமர் மோடியின் சீர்கெட்ட வெளியுறவுக் கொள்கை காரணமாக, இந்தியாவிலிருந்து சாதாரண பார்சல்கள் அனுப்புவது கூட கடினமாக உள்ளது. இந்த அரசாங்க தோல்விக்கு பாஜக விளக்கம் அளிக்க வேண்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி

30 நாள் சிறையிலிருந்தால் பதவியை பறிக்க வகை செய்யும் மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. அதனால் பதவி பறிப்பு மசோதா குறித்து ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற மாட்டோம்.