states

img

சரத் பவாருக்கு பெருகும் ஆதரவு அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசும் இரண்டாக உடைகிறது

சரத் பவாருக்கு பெருகும் ஆதரவு  அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசும் இரண்டாக உடைகிறது

மும்பை பாஜகவின் மிரட்டலால் சரத் பவார் உருவாக்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரது அண்ணன் மகன் அஜித் பவார் இரண்டாக உடைத்தார். அஜித் பவார் தலைமை யிலான தேசியவாத காங்கிரஸ் பிரிவு பாஜக கூட்டணியிலும், சரத் பவார் பிரிவு ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இத்தகைய சூழலில், கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த விமான விபத்தில் மகாராஷ்டிராவின் அப்போதைய துணை முதலமைச்சரான அஜித் பவார் காலமானார். தற்போது அவரது மனைவி சுனேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் தலைவராகவும், துணை முதலமைச்சராக வும் பொறுப்பேற்றுள்ளார். அஜித் பவார் மறை வுக்கு முன்பும், தற்போதும் தேசியவாத காங்கி ரஸ் கட்சியின் இரு பிரிவுகளை மீண்டும்  இணைப் பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகியுள்ளன.  எம்எல்ஏ-க்கள் பகிரங்க ஆதரவு இதனை உறுதிப்படுத்தும் விதமாக மாவல் தொகுதி எம்எல்ஏ சுனில் மற்றும் துணை சபா நாயகர் அன்னா பன்சோடே ஆகிய இருவரும் கூட்டாக,”இரண்டு பிரிவுகளும் இணைந்தால் அது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது”  என மார்ச் 29 அன்று வெளிப்படையாகத் தெரிவித்தனர். இருவரும் சரத் பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் பிரிவில் இணைய வேண்டும்  என கூறியதாகவும், இதே போன்று மேலும் 14 எம்எல் ஏக்கள் சுனில், அன்னா பன்சோடேவின் நிலைப் பாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அஜித் பவாரின் தீவிர விசுவாசிகளே இப்போது சரத் பவாருடனான இணைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது, பாஜகவிற்கு அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளை அடுத்து ராய்காட் மாவட்டத்தில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் தேசியவாத காங்கிரஸ் (அஜித்) மாநிலத் தலைவர் சுனில் தட்கரே மற்றும் அவரது மகளும், அமைச்சருமான  அதிதி தட்கரே கலந்துகொண்டனர். விழா மேடையில் அஜித் பவார், சுனேத்ரா பவாரின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. மாறாக, சுனில் தட்கரே குடும்பத்தி னரின் படங்கள் மட்டுமே இருந்தன. சரத் பவார் இதன்மூலம் சுனேத்ரா பவாரிடமிருந்து கட்சி யைப் பறிக்க ஒரு குழு (சுனில் தட்கரே மற்றும்  பிரபுல் படேல்) முயற்சிப்பதாக சரத் பவார் தரப்பு எம்எல்ஏ ரோகித் பவார் குற்றம் சாட்டி யுள்ளனர்.  தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைக்க நாங்கள் தயார். ஆனால் பாஜக கூட்டணியில் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு ஏற்கெனவே வெளிப்படையாக கூறிவிட்டது. தற்போதைய சூழலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைப்பதில் சரத் பவார் கை ஓங்குவதால், அதிர்ச்சியில் உள்ள பாஜக, பிரபுல் படேல் தலைமையில் அஜித் பவார் பிரிவை உடைக்க குதிரை பேரத்தில் இறங்கி யுள்ளதாக மராத்தி ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.