states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மத்திய ஆயுதக் காவல் படைகள் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு

நாடாளுமன்ற மாநிலங்கள வையில் திங்களன்று மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) மசோதாவிற்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி யின் எம்.பி., மனோஜ் குமார் ஜா, “ஒன்றிய அரசு மசோதாவை நிறை வேற்றும்போது, அது தொடர்பாக சம் பந்தப்பட்ட நபர்களிடமோ அல்லது பங்குதாரர்களிடமோ, மாநிலங்களிடமோ முறையான ஆலோசனைகளை நடத்துவதில்லை.  இதே நிலைமை தான் மத்திய ஆயுதக் காவல் படைகள் மசோ தாவிற்கும் நீடிக்கிறது. இந்த மசோதா வின் விதிகள் மிக மோசமாக உள்ளன. அதனால் இந்த மசோதாவை அவசர மாக நிறைவேற்றாமல், விரிவான பரி சீலனைக்காக நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார்.

புதுதில்லி இந்தியாவில் எரிபொருள் விலை கடுமையாக உயரும் அபாயம்

5 வார காலமாக நீடித்து வரும் மேற்கு ஆசிய போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள் ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 116.43 டாலராக உயர்ந்துள்ளது. இது இந்த ஒரே மாதத்தில் சுமார் 59% உயர்வைக் குறிக்கிறது. அதே போல டபி ள்யு.டி.ஐ கச்சா எண்ணெய் ஒரு பேரல் 103.10 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் எரிபொருள் விலை கடுமை யாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.