டிரம்புக்கு பயந்து இப்போது வரை வாய் திறக்காத மோடி அரசு
அமிர்தசரஸ், பிப். 5 - அமெரிக்காவில் சட்டவிரோத மாக குடியேறியவர்கள் நாடு கடத்தப் படுவார்கள் என்று, ஜனாதிபதித் தேர்தலின்போதே டிரம்ப் அறி வித்தார். அதன்படியே தற்போது தேர்தலில் வென்று ஜனாதியாகி விட்ட நிலையில், எந்த மனிதாபிமானமும் இல்லாமல்- சம்பந்தப்பட்ட நாடுகளி டம் குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை கூட நடத்தாமல், அனைவரையும் நாடு கடத்தும் வேலையில் தீவிரமாகி யுள்ளார். இதனொரு பகுதியாக, சட்ட விரோதக் குடியேறிகள் எனக் கண்ட றியப்பட்ட இந்தியர்களில் முதற்கட்ட மாக 104 பேரை, அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. இவர்கள், அமெரிக் காவின் சான் அன்டோனியோ விலிருந்து புதனன்று காலை பஞ்சாப்பின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்களில் தலா 33 பேர் விகிதம் 66 பேர் குஜராத் மற்றும் ஹரி யானாவைச் சேர்ந்தவர்கள். 30 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வர்கள். ஏனையோர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த நாடு கடத்தலானது இறுதி கிடையாது. வரும் நாட்களில் இன்னும் பல இந்தியர்கள் நாடு கடத்தப்படலாம் என்றும் அமெரிக்க அரசுத் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ராணுவ விமா னத்தில் ஏற்றிவரப்பட்ட இந்தியர் களின் கை, கால்களை சுமார் 48 மணி நேரம் சங்கிலியால் பூட்டி விலங்குகளைப் போல அமெரிக்கா நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட போது கை விலங்கிட்டு அமெரிக்கா வின் போர் விமானத்தில் ஏற்பட்ட புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. அவற்றின் மூலம், நாடு கடத்தலை அமெரிக்கா மிகமோசமான முறையில் கையாண் டிருப்பது வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தியர்களுக்கு இத்தனை ஆண்டு வரலாற்றில் அமெரிக்கா வால் இவ்வளவு மோசமான அவ மானம் நேர்ந்ததே இல்லை. அப்படி ஒரு அவமானம் தற்போது நேர்ந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. முறையான ஆவணங்கள் இல் லாமல் வாழும் வெளிநாட்டவர்கள், ‘ஏலியன்கள்’, ‘குற்றவாளிகள்’ என்பதே டிரம்பின் மிகக் கடுமையான பார்வை. நாடாளுமன்றத்திலேயே இதனை அவர் கூறியிருக்கிறார். “வரலாற்றில் முதல் முறையாக நாங்கள் ‘ஏலியன்களை’ கண்டுபிடித்து ராணுவ விமானங் களில் ஏற்றி, எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே கொண்டு சென்று விடுவோம்” என்று பேசியிருந்தார். அதன்படியே ஜனவரி 24 அன்று, சிலர் கைவிலங்கு போடப் பட்டு, ராணுவ விமானத்தில் ஏற்றும் புகைப்படத்தை வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு செய லாளர் கரோலின் லீவிட் ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்திருந்தார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தக் கடுமையான நிலை பாட்டின் காரணமாகவே, தற்போது இந்தியர்களையும் கை, கால்களை சங்கிலியால் பிணைத்து நாடு கடத்தியுள்ளார். இந்த நாடு கடத்தலுக்கு ராணுவ விமா னத்தையும் பயன்படுத்தியுள்ளனர். சாதாரண விமானத்தில் நபருக்கு ரூ. 74,312 மட்டுமே செலவாகும் என்றா லும், 5 மடங்கு கூடுதலாக 4.07 லட்சம் செலவிட்டு, இந்தியர்களை ராணுவ விமானத்தில் (C-17) அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோத மாக குடியேறியவர்கள் என்று முதற்கட்டமாக 20,407 இந்தியர் களை அமெரிக்கா அடையாளம் கண்டுள்ள நிலையில், வருகின்ற நாட்களில் நாடு கடத்தல் பிரச்சனை மேலும் தீவிரமாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால், இவ்வளவு பிரச்சனை களுக்கு இடையிலும், இந்தியர் களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடு மை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உட்பட ஒன்றிய பாஜக அரசு இதுவரை எதுவும் பேசா மல் மவுனமாக உள்ளது. டிரம்புக்கு, பிரதமர் மோடி பயப்படுகிறார் என்பதையே இது காட்டுவதாகவும், அதனால் தான் தமது மக்கள் அவ மானப்படுத்தப்படுவதைக் கூட பிர தமர் மோடி கண்டிக்க மறுக்கிறார் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரி வித்துள்ளன.