states

img

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக ளுக்கு தடை மற்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது போல,  கர்நாடகாவிலும் (காங்கிரஸ் ஆளும்) தடைவிதிக்கும் வகையில் விதி கொ ண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.  இத்தகைய சூழ் நிலையில், கடந்த வாரம் கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் அந்த அமைப்பின் சீருடை அணிந்து கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி இடைநீக்கம் செய் யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் போராட்டம் என்ற பெயரில் வன்முறை பதற்றத்தை தூண்டி வருகின்றன. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் நிகழ் வில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை என கர்நாடக அமை ச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாநில ஐடி துறை அமைச்சர் பிரியங் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது. மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். ஒன்றிய அரசு பணி யாளர்களுக்கான விதிகள் (ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்வுகளில் அரசு ஊழி யர்கள் பங்கேற்கலாம்) மாநில அரசு ஊழி யர்களுக்கு பொருந்தாது. அதனால் கவ னமாக இருக்க வேண்டும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரியங் கார்கே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார் கேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.