states

img

“மோடி அரசின் உதடுகளை யாரோ தைத்துவிட்டார்கள்”

“மோடி அரசின் உதடுகளை யாரோ தைத்துவிட்டார்கள்”

லக்னோ இந்திய எல்லைக்கு அருகே அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் துவங்கியுள்ள  சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், இது தொடர்பாக பதிலளிக்காமல் உதடுகளை தைத்துவிட்டார்கள் என்று கூறுவது போல மோடி அரசின் செயல்பாடு உள்ளது என  ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில், அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் இந்திய எல்லைகளுக்கு அருகில், இந்தி யப் பெருங்கடல் வரை எட்டியிருப்பது (ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்) நாட்டு மக்களுக்கு கவலையளிக்கும் விஷயமாகும். இந்த தீவிரமான விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு மவுனம் காப்பது அதைவிட கவலைக்குரியது. இதனை வெறும் ‘மவுனம்’ என்று கருத வேண்டுமா? அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பயத்தினால் ஏற்பட்ட ‘பேச்சற்ற நிலை’ என்று கருத வேண்டுமா? என்பதை மோடி அரசு தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக பாஜக அரசின் உதடுகளை யாரோ தைத்துவிட்டது போன்ற இக்கட்டான நிலை ஏற்பட என்ன காரணம்? மோடி அரசின் எந்த  ரகசியம் மவுனமாக்கியது என்பதை நாட்டு மக்க ளுக்கு விளக்க வேண்டும். இது சர்வதேச விவகாரம் என்பதால், மோடி அரசு, வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து தங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது அவர்களின் கூட்டுப் பொறுப்பாகும். ஆனால், பல நாட்கள் காத்திருந்தும் அரசு வாய் திறக்காததால், இந்த உலகளாவிய பிரச்சனையில் எதிர்க்கட்சிகள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி காலத்தில் அரசு முன்வந்து நாட்டின்  நீர், நிலம் மற்றும் வான் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எதையும் சொல்லக்கூடத் துணியாத பாஜக  அரசு, என்ன செய்யப் போகிறது என்று எண்ணி நாட்டு மக்கள் கவலையில் உள்ளனர். பாஜக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. நாட்டில் அரசு என்ற ஒன்றே இல்லாதது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என அவர் கூறினார்.