தில்லி மெட்ரோ பவன் முன் எஸ்எப்ஐ ஆர்ப்பாட்டம்
பாஜக ஆளும் தில்லியில் மெட்ரோ ரயில் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எப்ஐ) சார்பில் தில்லி மெட்ரோ பவன் முன் வியாழக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர்களும் பொதுமக்களும் அதிக அளவில் பயன்படுத்தும் மெட்ரோ சேவைக்கு கட்டணம் உயர்த்தப்படுவது மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது என்றும், மெட்ரோ சேவை மக்களுக்கு ஏற்ற விலையில், அனைவரும் அணுகக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்றும், கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்கள், இளைஞர்கள் முழக்கங்களை எழுப்பினர்.