பால்கர் கட்டட விபத்து பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் நகரில் 4 மாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. அபார்ட்மெண்ட் போன்று உள்ள இந்த பெரிய குடியிருப்பில் 50 வீடுகள் உள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று நள்ளிரவு நேரத்தில் இந்த கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து, அருகிலுள்ள காலியாக இருந்த குடி யிருப்பின் மீது விழுந்தது. தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அனை வரும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எனினும் விபத்துக்குள்ளான கட்டடம் நெரிசலான பகுதியில் அமைந்துள்ள தால் மீட்புப் பணிகளுக்கு கனரக இயந்தி ரங்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற் பட்டது. இதனால் இடிபாடுகளை அகற்று வதில் தாமதம் ஏற்பட்டது. விபத்து நடந்த பல மணி நேரத்துக்கு பிறகு கட்டட இடிபாடுகளில் இருந்து 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். பலத்த காயங்களுடன் 20 பேர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் வியாழக்கிழமை நில வரப்படி பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் புதைந்திருக்கலாம் என கூறப்படுவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.