ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால்
கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி விவசாயிகளுக்குத் துரோகம் இழைக்கும் சில முடிவுகளை ரகசியமாக எடுத்துள்ளார். இதுகுறித்து 90 முதல் 95% விவசாயிகளுக்கு இன்னும் தெரியாது. இந்த முடிவுகள் அமல்படுத்தப்படும் போது விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
பீகாரின் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக நலிந்த பிரிவைச் சேர்ந்த 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. பாஜக, தேர்தல் ஆணையம் தங்கள் வாக்குரிமையை கொள்ளையடிக்க பீகார் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். வாக்குத் திருட்டில் பாஜக, தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதை நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம்.
திரிணாமுல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி
மக்கள் என்ற வாக்காளர்கள் தான் அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர்களை அரசாங்கம் தேர்ந்தெடுத்து வருகிறது. இது பெரும் மக்கள் போராட்டங்களை தூண்டும்.
சிபிஐ (எம்-எல்) தீபங்கர் பட்டாச்சார்யா
பீகார் மக்கள் பாஜக கூட்டணி அரசாங்கத்தால் சலித்துப் போயுள்ளனர். பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் துரோகிகள் என்பதை பீகார் மக்கள் தெளிவாக இப்போது அறிந்திருக்கிறார்கள். இதனால் பாஜக கூட்டணி மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.