சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத்
ஷம்பு எல்லையில் விவசாயிகள் மீண்டும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இது விவசாயிகளுக்கு ஒரு அவமானம். இந்த நாடு விவசாயிகளின் நாடு. நாட்டின் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லாத வரை, நமது நாடு மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
ஆர்ஜேடி எம்.பி., மிசா பார்த்தி
பீகாரில் செயல்படும் அரசாங்கம் எதுவும் இல்லை. அதனால் சட்டம் - ஒழுங்கு என்பதே மாநிலத்தில் இல்லை. முதலமைச்சர் நிதிஷ் குமார் அரசாங்கத்தை நடத்த முடியாவிட்டால், அவர் பதவி விலக வேண்டும். ஆனால் மக்களை துன்புறுத்தக் கூடாது.
காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகிய இருவரும் விவசாயிகளின் நலன்களை பற்றி சிந்திக்காமல், விவசாயிகளுக்கு எதிராக சதி செய்கின்றனர். இதனால் பஞ்சாப் விவசாயிகள் மீது தாக்குதலுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திரிணாமுல் எம்.பி., கீர்த்தி ஆசாத்
பாஜக நாட்டின் முன்னேற்றம் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. நான் ஒரே ஒரு விஷயத்தை கூறுகிறேன். அரசாங்கங்களை மதத்தின் அடிப்படையில் ஒருபோதும் நடத்த முடியாது. ஆனால் ஆர்எஸ்எஸ் - பாஜக சமூகப் பிளவை மட்டுமே நம்பியுள்ளனர்.