சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் பாஜக வெற்றி பெற்றது இதுவே முதல்முறை. தேர்தல் நடப்பதற்கு முன்பே ஆயிரக்கணக்கான வாக்குகளை தேர்தல் ஆணையம் நீக்கி இருக்கிறது. இந்த முறைகேடு நடந்தது தொடர்பான ஆதாரங்களை ஆணையத்திடம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி
நாட்டின் பல மாநிலங்களில் எஸ்ஐஆர் நடக்கிறது, ஆனால் எஸ்ஐஆர் நடத்த சட்டப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை என்று நான் மிகுந்த பொறுப்புடன் சொல்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தில் எஸ்ஐஆருக்கு எந்த ஏற்பாடும் இல்லை.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
வந்தே மாதரத்தை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜியை, நாடாளுமன்றத்தில் “பங்கிம் டா” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது மோசமானது. மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்காளத்தின் கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியத்தை அழித்துவிடும். எஸ்ஐஆர் நடைமுறைக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வெகு விரைவில் அறிவிப்பார்கள்.
தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்.பி., சுப்ரியா சுலே
மகாராஷ்டிர பாஜக அரசிடம் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய பணம் இருக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க பணம் இல்லையாம். கேள்வி கேட்டால் அமலாக்கத்துறை, சிபிஐ-ஐ அனுப்புகிறார்கள்.
