states

img

குடியிருப்பு அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: சேலம் பூசநாயக்கனூர் தலித் குடியிருப்பிற்குள் புகுந்து சாதி ஆதிக்கச் சக்தியினர் தாக்குதல்

சென்னை,நவ.2-  சேலம் பூசநாயக்கனூர் தலித்  குடியிருப் பிற்குள் புகுந்து சாதி ஆதிக்க சக்தியினர் நடத்திய தாக்குதலுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சேலம் மாவட்டம் நாயக்கன்பட்டியைச் சார்ந்த சாதி ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த இளை ஞர்கள் சிலர் தீபாவளி தினத்தன்று பூசநாயக் கனூர் தலித் அருந்ததியர் குடியிருப்பிற்கு அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டி ருந்தனர். இதனைப் பார்த்த தலித் குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர் விஜய் என்பவர் ,எங்கள் குடியி ருப்பிற்கு அருகில் அமர்ந்து மது அருந்த வேண் டாம். சற்று தள்ளிப் போங்கள் என்று கூறி யுள்ளார். கம்ப்யூட்டர் -பொருள்கள் உடைப்பு இதனால் ஆத்திரமடைந்த சாதி ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள்  விஜய்யை சாதியைக் குறிப்பிட்டு அருவருக்கத்தக்க ஆபாச  வார்த்தைகளில் பேசிக் கொண்டே கடு மையாகத் தாக்கியுள்ளனர்.அப்படியும் ஆத்தி ரம் தீராத சாதிய வாதிகள் 10 க்கும் மேற்பட்ட வர்கள் ஒன்றுதிரண்டு விஜய்யின் உறவினரான சதீஷ் குமார் வீட்டின் மேற்கூரையின் ஆஸ் பெஸ்டாஸ் ஓடுகளை உடைத்து, வீட்டுக்குள்ளே குதித்து,சதீஷ்குமாரின் புகைப்படத் தொழி லுக்காக வைத்திருந்த கம்ப்யூட்டர் மற்றும் இதர உபகரணங்களையும் டிவி,செட்டப் பாக்ஸ் ஆகிய பொருள்களையும் உடைத்துள்ளனர். அதோடு சதீஷ்குமார், அவரது துணைவியார், தாயார் ஆகிய மூவரையும் கடுமையாக தாக்கி யுள்ளனர்.  அச்சமயத்தில் அவ்வழியாக காரில் வந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஜெயக் குமார்  என்பவர் ,ஏன் இப்படி செய்கிறீர்கள் என தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம டைந்த அந்த இளைஞர்கள் ,ஜெயக்குமாரின் காரின் கண்ணாடியை உடைத்து அவரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.அவர் கை எலும்பு முறிக்கப்பட்டு,முகத்தில் கொடும் காயங் கள் ஏற்பட்டுள்ளன.அவரைப் பாதுகாக்க முயன்ற அவரது உறவினர்கள் வெங்கடாசலம் மற்றும் செல்வராசு ஆகியோரையும்   கல்லால் அடித்து  காயப்படுத்தினர். காயமடைந்த அனைவரும் 108 ஆம்பு லன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஜெயக்குமார் கொடுங்காயங்களுடன்  கோவை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதற வைக்கும் காணொலிக் காட்சி   சாதி  ஆதிக்க இளைஞர்கள், தலித் மக்க ளின் வீடுகளை உடைத்து வன்கொடுமையில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட  காணொலிக் காட்சிகள்  காண்போரை பதற வைக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட 5 சிறுவர் கள் உட்பட 12 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொ டுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, சிறுவர்கள் சிறார் இல்லத்திலும், மற்ற வர்கள் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளனர்.  இக்கொலை பாதகச் செயலை வன்மையாக கண்டிப்பதோடு,சேதப்படுத்தப்பட்ட பொருள் களை துல்லியமாக மதிப்பீடு செய்து,தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நிவார ணத்தையும் குடியிருப்புக்கு உரிய பாதுகாப்பை யும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.